மீண்டும் திரெளபதியின் மிரட்டல் ஆரம்பம்.. மோகன்ஜியின் திரௌபதி-2 பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் மோகன்ஜி. அதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு திரௌபதி திரைப்படத்தை இயற்றினார். அப்பொழுது பல சர்ச்சைகள் வெடித்தது. அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு ருத்ர தாண்டவம் என்ற படத்தை இயக்கினார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் செல்வா ராகவன் நடிப்பில் பகாசுரன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
இந்த படம் மக்களிடையே தேவையான விமர்சனங்களை பெற்றது. இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். ஜாதியை முன்னிலைப்படுத்தி இவரின் படங்கள் இருக்கும். அதன் காரணமாகவே இவர் மீது ஜாதிய முத்திரை குத்தப்பட்டது.
தன்னுடைய படங்களில் கூறிய கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கினாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து சினிமாவில் தன்னுடைய அரசியலை பேசி வருகிறார் இயக்குனர் மோகன் ஜி. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போன்றவற்றில் பெரும் கலப்படம் இருப்பதாக அதனால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதாக யூடியூபில் சர்ச்சையை கிளப்பியிருந்தார் இயக்குனர் மோகன் ஜி.

இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து போலீசில் புகார் கொடுத்து அவரை கைது செய்தார்கள். மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் தமிழக மக்களிடையே போலி செய்தி பரப்புகிறார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இருந்தபோதிலும் அவர் நிபந்தனை ஜாமின் வெளிவந்தார். தொடர்ந்து ஏதாவது சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசி வருவது இவரின் வழக்கமாக இருக்கிறது.
இந்நிலையில் இன்று அவர் இயக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ஏற்கனவே இவர் இயக்கிய திரௌபதி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். இந்த படத்தின் கதாநாயகனாக ஷாலினிஅஜித்தின் உறவினர் நடிக்கிறார். அடிப்படையில் மோகன் ஜி அஜித்குமாரின் தீவிர ரசிகர்.
இதை அவரே பல இடங்களில் சொல்லியிருக்கிறார். இந்நிலையில் தான் இயக்கவிருக்கும் திரௌபதி-2 படத்தின் கதாநாயகனாக அஜித்தின் உறவினரை நடிக்க வைத்துள்ளார். மேலும் மோகன் ஜி தன்னுடைய எக்ஸ் தள பதிவில் , ”வீரசிம்ம காடவராயன்.., மீண்டும் திரெளபதியின் மிரட்டல் ஆரம்பம்..
தென்னகத்தை ஆண்ட ஹொய்சாள பேரரசன் மூன்றாம் வீர வல்லாளர் மற்றும் சேந்தமங்கலத்தை ஆண்ட காடவராயர்களின் வீரம், தியாகம், ஆகியவற்றுடன் வலி நிறைந்த இரத்த சரித்திரம் #திரெளபதி2.. விரைவில் திரையில் சந்திப்போம்”. என்று பதிவிட்டுள்ளார். சரித்திர பின்னணியில் இந்த படம் உருவாகுவது போல் இதன் பர்ஸ்ட் லுக் உணர்த்துகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


