எதிரி யாருன்னு யோசிக்காம சண்ட செய்யணும்!.. ஆக்சன் மோடில் ஹரிஷ் கல்யாண்.. தீபாவளி ட்ரீட் தரும் டீசல்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து வெற்றி கொடுத்து வருகிறார். ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடைசியாக வெளியான இரு படங்களும் அதாவது ”பார்க்கிங்” மற்றும் ”லப்பர் பந்து” மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் மூலம் தமிழ் சினிமா அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கை நட்சத்திரத்தை கண்டெடுத்தது என்றே சொல்லலாம். காரணம் மக்களிடம் பெற்ற வரவேற்பு அவரை ஒரு நல்ல நடிகராக அடையாளப்படுத்தியது. இரு படங்களும் குடும்ப ரசிகர்களின் ஆதரவு பெற்று வசூல் ரீதியாகவும் கலெக்ஷனை அள்ளியது. இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் அடுத்த ரிலீஸ் க்கு தயாராகி வருகிறார்.

அந்த வரிசையில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட டீசல் படம் தற்போது தூசி தட்டப்பட்டு ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் அதுல்யா ரவி, அனன்யா, சாய்குமார்,வினய், ஜாகிர் ஹுசைன், விவேக் பிரசன்னா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

#image_title

ஏற்கனவே இந்த திரைப்படத்தில் வெளியான ’பீர் சாங்’ மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கில் இருந்தது. சமூக வலைதளங்களில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை இந்த பாடலை பயன்படுத்தி ரீல்ஸ் செய்து வைப் செய்து வந்தனர். இரண்டு வருடங்கள் ஆனாலும் இன்னும் பசுமையாக மக்களின் விரும்பத்தக்க பாடலாகவும், குழந்தைகளின் விரும்பத்தக்க பாடலாக இருக்கிறது.

இந்நிலையில் படம் எப்பொழுது வரும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விநாயகர் சதுர்த்தியான இன்று படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. ”அதிகாரத்தையும் பணப்பலத்தையும் எதிர்த்து மக்கள் சந்தோஷமாக இருக்கணும் என்றால், எதிரி யாருன்னு யோசிக்காம சண்டை செய்யணும்” என்று ஹரிஷ் கல்யாண் பேசும் வசனத்துடன் டீசர் தொடங்குகிறது. ஹரிஷ் கல்யாண் படம் என்றாலே குடும்ப ஆடியன்ஸ்களுக்கு ஏற்ப ஃபீல் குட் படமாக இருக்கும்.


ஆனால் அதிரடி ஆக்சன் மோடில் களமிறங்கி இருக்கார் என்று தெரிகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து டீசர் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெருமையானால் ஹரிஷ் கல்யாண் ஆக்ஷன் ஹீரோவாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார். மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் இந்த வருட தீபாவளி அன்று வெளிவரும் என பட குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டீசல் படத்தின் டீசர் இதோ :

https://youtu.be/Vrq8QFSati8?si=Xa3RE8n35abKdqek

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.