லவ் யூ.. லவ் யூ நண்பா!.. ஜாலி வைப் பண்ணும் வடிவேலு – பிரபுதேவா!.. வைரல் வீடியோ…
நடிகர் வடிவேலு சினிமாவில் வளர துவங்கிய போது அவருக்கு கை கொடுத்தது பிரபுதேவாவின் படங்கள் என்று சொல்ல வேண்டும். முக்கியமாக கிராமத்து படங்களில் மட்டுமே நடித்து வந்த வடிவேலுவுக்கு ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா ஹீரோவாக நடித்த காதல படத்தில் அவரின் நண்பராக படம் முழுக்க வரும் வேடம் கிடைத்தது.
இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட வடிவேலு அவர் வரும் எல்லா காட்சிகளிலும் ரசிகர்களை சிரிக்க வைத்தார். காமெடி மட்டும் இல்லாமல் அந்த படத்தில் பிரபுதேவாவோடு சேர்ந்து பாடல்களில் நடனமும் ஆடியிருப்பார்.

அதன்பின் லவ் பேர்ட்ஸ், ராசையா, மிஸ்டர் ரோமியோ, மனதை திருடி விட்டாய் உள்ளிட்ட பல படங்களிலும் தொடர்ந்து பிரபுதேவாவுடன் அவரின் நண்பராக நடித்தார் வடிவேலு. குறிப்பாக மனதை திருடி விட்டாய் படத்தில் படம் முழுக்க இங்கிலீஷ் பேசி ரசிகர்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதிலும் ‘ஒய் பிளட்.. சேம் பிளட்’ என அவர் பிரபுதேவாவை பார்த்து சொல்லும் வசனம் மிகவும் பிரபலம். மேலும் பிரபுதேவா இயக்கிய போக்கிரி, வில்லு ஆகிய இரண்டு படங்களிலும் காமெடியில் அசத்தி இருந்தார் வடிவேலு.
மேலும் ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் பல வருடங்களுக்குப் பின் பிரபுதேவாவும் வடிவேலும் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் பிரபுதேவா ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். காரில் வடிவேலு அவரும் அமர்ந்திருக்க பிரபுதேவவை பார்த்து ‘நண்பா நண்பா.. ஓ மை நண்பா.. லவ் யூ லவ் யூ நண்பா என வடிவேலு பாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ‘ப்ரெண்ட்ஷிப்’ என கேப்ஷன் கொடுத்திருக்கிறார் பிரபுதேவா. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
View this post on InstagramA post shared by Prabhudeva (@prabhudevaofficial)
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


