Ravimohan: கெனிஷா மாதிரி ஒரு ஆள் எல்லாருக்கும் அமையணும்.. என்ன சொல்றீங்க ரவி?

Ravimohan: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரவிமோகன். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். ஜெயம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரவிமோகன் முதல் படத்திலேயே அபார வெற்றிபெற்றார். அதனை தொடர்ந்து வரிசையாக வெற்றிப்படங்களிலேயே நடித்து வந்த ரவிமோகனுக்கு இடையில் சில சறுக்கல்கள் வரத் தொடங்கியது.

அவருடைய மாமியார் புரடக்‌ஷனில் அவர் நடித்த படங்கள் அனைத்துமே அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனாலேயே குடும்பத்திற்கு பிரச்சினை எழுந்து அது அவர்கள் திருமண வாழ்க்கையிலும் பிரச்சினையை உண்டு பண்ணியது. இப்போது ரவிமோகனும் அவருடைய மனைவி ஆர்த்தியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து வழக்குத்தான் இப்போது நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.

இதற்கிடையில் இன்று ரவிமோகன் தனியாக புரடக்‌ஷன் கம்பெனியை ஆரம்பித்திருக்கிறார். அதன் தொடக்க விழாதான் இன்று நந்தம்பாக்கத்தில் நடந்தது. இந்த விழாவை கோலாகலமாக நடத்தினார் ரவிமோகன். குறிப்பாக சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, யோகிபாபு, ரவிமோகனின் அம்மா, அண்ணன் என திரையுலகைச் சார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

முக்கியமாக நடிகை ஜெனிலியா தன் கணவருடன் இந்த விழாவில் கலந்துகொண்டார். அப்போது சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் சில காட்சிகளை ரவிமோகனும் ஜெனிலியாவும் ரி கிரியேட் செய்தனர். இந்த நிலையில் மேடையில் ரவிமோகன் பேசும் போது ‘இந்த நேரத்தில் நான் ஒரு ஆளுக்கு நன்றி சொல்லணும். அவங்க இல்லைனா இன்று இந்த விழா நடந்திருக்காது. இந்த விழா நடக்க காரணமே அவங்கதான். அவங்க வேறு யாருமில்லை. கெனிஷா.’

‘ஒரு கட்டத்தில் நாம் யாருமில்லாமல் கஷ்டத்தில் இருக்கும் போது கடவுள் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வார். அது பொருளாக இருக்கலாம், பணமாக இருக்கலாம். அப்படி கடவுள் கொடுத்த பரிசுதான் கெனிஷா. அவங்க இல்லைனா இன்று நான் இங்கு இல்லை.இப்படி எல்லாருக்கும் ஒருத்தர் அமையணும். அப்படி அமைந்தால் அவங்க வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும்’ என கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.