‘த டாக்ஸிக்’ படத்துக்காக 45 நாட்கள் ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்பு!

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்து வரும் படம், ‘த டாக்ஸிக்’. இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி என பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படம் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிறது.

ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி, இதில் பணியாற்றுகிறார். இவர், ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’, ‘ஜான்விக்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளார். ‘த டாக்ஸிக்’ படத்துக்கான ஆக்‌ஷன் காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. அங்கு 45 நாட்கள் நடக்க இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.