பாக்ஸ் ஆபிஸில் நான்தான் கிங்!… நிரூபித்த விஜயகாந்த்.. வசூலை குவிக்கும் கேப்டன் பிரபாகரன்…
Captain Prabhakaran: விஜயகாந்தின் நூறாவது படமாக வெளிவந்த திரைப்படம் கேப்டன் பிரபாகரன். 1991ம் வருடம் வெளியான இந்த படம் வசூலை வாரிக் குவித்தது. தமிழ்நாட்டில் சில தியேட்டர்களில் 250 நாட்களுக்கு மேல் இப்படம் ஓடியது. திரையிட்ட இடமெல்லாம் கேப்டன் பிரபாகரன் வசூலை அள்ளி தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும் அதிக லாபத்தை கொடுத்தது.
ரஜினி, கமல் போன்ற நடிகர்களுக்கு நூறாவது படம் கை கொடுக்காத நிலையில் விஜயகாந்துக்கு அவரை நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் வெள்ளி விழா படமாக அமைந்தது. அப்போது சந்தன மரங்களை வெட்டி கடத்தி வந்த வீரப்பன் கதாபாத்திரத்தை வில்லன் கதாபாத்திரமாக சித்தரித்து அதில் மன்சூர் அலிகானை நடிக்க வைத்து படத்தை எடுத்திருந்தார் ஆர்.கே.செல்வமணி.
பக்கா ஆக்சன் காட்சிகளோடும், அசத்தலான வசனங்களோடும் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இருக்கிறது. கடந்த 22ம் தேதி கேப்டன் பிரபாகரன் திரைப்படம் தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

அப்போது முதலே இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது. முதல் நாள் 42 லட்சம், இரண்டாம் நாள் 86 லட்சம், மூன்றாம் நாள் 1.3 கோடி, நான்காம் நாள் 1.96 கோடி என வசூல் அதிகரித்துக் கொண்டே போகிறது. மொத்தத்தில் படம் ரிலீஸ் செய்யப்பட்ட நான்கு நாட்களில் 4.54 கோடியை இப்படம் வசூல் செய்திருக்கிறது.
பல தியேட்டர்களில் ஒரு காட்சி, இரண்டு காட்சியாக வெளியிடப்பட்ட கேப்டன் பிரபாகரன் இப்போது நான்கு காட்சிகளாக மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ரீ-ரிலீசிலும் நான்தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என நிரூபித்து காட்டியிருக்கிறார் விஜயகாந்த்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


