Siragadikka Aasai: இதெல்லாம் ஒரு எபிசோட்டா? சிறகடிக்க ஆசை சீரியலுக்கு என்னத்தான் ஆச்சு…
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மனோஜ் கிரிஷ் ஸ்கூலுக்கு செல்ல இருப்பதால் அதை தடுக்கும் விதமாக ரோகிணி தனக்கு நெஞ்சு வலிக்குது என பில்டப் கொடுக்க அவரை பார்க்க திரும்பி வந்துக்கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் நண்பர் கால் செய்து மனோஜ் எங்கு இருக்கீங்க எனக் கேட்கிறார்.
ஆனால் ரோகிணி இப்படி ஆகிவிட்டது. அதனால் வீட்டிற்கு சென்று கொண்டு இருப்பதாகவும், அங்கு சென்று கால் செய்வதாகவும் சொல்கிறார். வீட்டு வாசலுக்கு வரும் மனோஜை அவர் கல்லால் அடித்த நாய் கடித்து விடுகிறார். ரோகிணி மனோஜ் ஸ்கூலுக்கு போய் இருப்பானோ என சந்தேகத்தில் இருக்கிறார்.
அந்த நேரத்தில் வலியில் துடித்துக்கொண்டு இருந்த மனோஜை அந்த நாயின் உரிமையாளர் மற்றொருவர் சேர்ந்து தூக்கி கொண்டு வருகின்றனர். குடும்பத்தினர் பதறி என்னவென கேட்க தன் நாய் பழி வாங்கி விட்டதாக சொல்கிறார்.
நாய் பழி வாங்குமா என குடும்பத்தினர் அதிர்ச்சியாக பார்க்கின்றனர். பின்னர் டாக்டர் வந்து நாய் எங்க கடிச்சிதுனு கேட்க வாசலில் என புரியாமல் சொன்னதையே மனோஜ் சொல்ல ரோகிணியை தவிர எல்லாரும் சிரிக்கின்றனர்.
மனோஜ் இதில் நாய் மாதிரி ஆக்ஷன் வேறு செய்கிறார். பின்னர், முத்து உன் உடம்புல எங்க கடிச்சிது எனக் கேட்க காலை காட்டுகிறார். டாக்டர் ஊசி போட்டு சிகிச்சை செய்துவிட்டு ஐந்து வாரம் போடணும். நாயிற்கு எந்த ஆபத்தும் வராம பாத்துக்கோ என்கிறார்.

பின்னர் விஜயா மனோஜை எதுக்கு நீ திரும்பி வந்த எனக் கேட்க ரோகிணி கூப்பிட்டா எனக் கூறினால் திட்டுவிழும் என்பதால் பர்ஸை மறந்து வைத்துவிட்டதாகவும், அதனால் வந்தேன் எனவும் கூறி சமாளிக்கிறார். ரோகிணி மனோஜை கை பிடித்து ரூமிற்கு அழைத்து செல்கிறார்.
சாரி மனோஜ் என்னால தானே உனக்கு இப்படி எனக் கேட்க அதெல்லாம் இல்ல. இப்போ உனக்கு எப்படி இருக்கு எனக் கேட்க உனக்கு நாய் கடிச்சதுல என் புராப்ளம் சால்வ் ஆச்சு என்கிறார். என்ன என மனோஜ் புரியாமல் கேட்க என் வலி மறந்து போச்சு என சமாளிக்கிறார்.
ரோகிணி மனோஜை ஜாக்கிரதையாக இருக்க சொல்கிறார். சாப்பிட என்னவேணும் எனக் கேட்க பாலும், பிஸ்கெட்டும் என்கிறார். என்ன மனோஜ் நாயுக்கு பிடிச்சதை கேட்கிற எனக் கேட்க எனக்கு அதான் சாப்பிட தோணுது என்கிறார் மனோஜ். சில நாய் செய்கைகளையும் செய்ய ரோகிணி அதிர்ச்சியாக பார்க்கிறார்.
அடுத்த நாள் வீட்டில் விஜயா, அண்ணாமலை இருக்க அப்போ வரும் முத்து நான் மரம் நடப்போறேன் எனக் கூற மீனா செடிதானே நடுவாங்க எனக் கலாய்க்கிறார். பின்னர் விஜயா செய்த விஷயத்தை சொல்ல அவருக்கு சப்போர்ட் பேசும் விதமாக ரோகிணி ஜால்ரா அடிக்க மீனா, முத்து சிரித்து கொள்கின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


