Vinayagar Chathurthi: என்ன ஒரே தனுஷ் மயமா இருக்கு? விநாயகர் சதுர்த்தியில் டாப் டிவிக்களின் சிறப்பு திரைப்படங்களின் அப்டேட்!

Vinayagar Chathurthi: தமிழ் பண்டிகைக்களில் ஒவ்வொரு டிவிக்களிலும் புதிய படங்களை ஒளிபரப்பு செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அன்று டாப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் படங்களின் அப்டேட் குறித்த தொகுப்புகள்.

சன் டிவியில் காலை 11 மணிக்கு தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் திருச்சிற்றம்பலம் திரைப்படம் ஒளிபரப்பப்பட இருக்கிறது. மூன்று தேசிய விருதுகளை தட்டிய படம் என்பதாலும் ஏற்கனவே இப்படம் ரசிகர்களிடம் புகழ் பெற்று என்பதால் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. 

மதியம் 3 மணிக்கு பேய் படங்களின் சீரிஸில் ஹிட்டடித்த சுந்தர்.சியின் அரண்மணை 2 ஒளிபரப்பப்பட இருக்கிறது. திரிஷா நடிப்பில் மிரட்டி விட்ட இப்படம் நல்ல டைம் பாஸாகவே அமையும். 

அதுமட்டுமல்லாமல், பண்டிகை காலத்தில் பட்டிமன்றம் இல்லாமல் எப்படி. சாலமன் பாப்பையா தலைமையா இன்றைய காலத்தில் பரிதாபத்துக்குரியவர் கணவனா, மனைவியா என்ற தலைப்பில் 10 மணிக்கு ஒளிபரப்பாகும். 

#image_title

விஜய் டிவியில் காலை 11 மணிக்கு அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்த புஷ்பா 2 ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. 1000கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்த இப்படம் முதல் வெளியீடு என்பதால் டிஆர்பியில் ஹிட்டடிக்கும் என்பது பேச்சாக இருக்கிறது. 

வித்தியாசமான கொள்ளை படமாக சுந்தர். சி, வடிவேலு, கேத்ரீன் தெரசா நடிப்பில் சமீபத்தில் வெளியானது கேங்கர்ஸ். இப்படம் நாளை 3 மணிக்கு ஒளிபரப்பட இருக்கிறது. 

கலைஞர் டிவியில் பிரதீப் ரங்கநாதனின் மிகப்பெரிய வெற்றி படமான லவ் டூடே காலை 10 மணிக்கும், சித்தார்த்தியின் மிஸ் யூ திரைப்படம் மதியம் 1.30க்கும் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் மாலை 5 மணிக்கு வெளியாகும். காலை 12 மணிக்கு திரிஷா கதையின் நாயகியாக நடித்த தி ரோட் ஒளிபரப்பாக உள்ளது. 

கலர்ஸ் தொலைக்காட்சியில் காலை 9 மணிக்கு சந்தானம் நடிப்பில் சபாபதியும், மதியம் 2.30க்கு மம்முட்டி, நயன்தாரா நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் திரைப்படமும் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. 

கேடிவியில் காலை 7 மணிக்கு கார்த்தி சிவகுமார் நடிப்பில் தேவ் திரைப்படமும், 10 மணிக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் மீசைய முறுக்கு, பகல் 1 மணிக்கு சூர்யா நடித்த அயன், 4 மணிக்கு விஷால் நடிப்பில் ஆம்பள திரைப்படமும், 7 மணிக்கு தனுஷ் நடிப்பில் பட்டாஸ் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.