நான் KPY பாலாவின் ரசிகனாக மாறிவிட்டேன்!… அட இளையராஜாவே சொல்லிட்டாரே!…

KPY Bala: விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்கிற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்தான் பாலா. இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானதால் KPY பாலாவாக மாறிவிட்டார். விஜய் டிவியில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அதில் இவர் உள்ளே புகுந்து காமெடி செய்வார். இவரின் காமெடிக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இருக்கிறது. நிறைய திரைப்படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். இப்போது காந்தி கண்ணாடி என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் பாலா.

ஒருபக்கம் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து நிறைய பேருக்கு பாலா உதவி செய்து வருகிறார். பணமாக கொடுப்பது, ஆட்டோ வாங்கி கொடுப்பது, தையல் மெஷின் வாங்கிக் கொடுப்பது, ஒருவரின் வாழ்வாதாரத்திற்கு தேவையான விஷயங்களை அமைத்துக் கொடுப்பது என இவர் செய்யும் உதவிகள் ஏராளம்.

அதிலும் ஆம்புலன்ஸ் வசதி இல்லாத பல மலை கிராமங்களுக்கு பல ஆம்புலன்ஸ்களை இவர் வாங்கிக் கொடுத்திருக்கிறார். மேலும் தான் உதவி செய்யும் சம்பவங்களை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இவர் விளம்பரத்திற்காக செய்கிறார் என சிலர் சொன்னாலும் ‘என்னைப் பார்த்து மற்றவர்களுக்கும் இப்படி உதவி செய்யும் எண்ணம் வரும் என்பதால்தான் வீடியோக்களை பதிவிட்டு வருகிறேன்’ என பதில் சொன்னார் பாலா.

இப்படி எல்லாருக்கும் பிடித்தமானவராக மாறி உள்ள பாலாவை பற்றி இசைஞானி இளையராஜா பேசியிருக்கிறார். ‘பாலாவை டிவியில் அதிகமா பாத்துகிட்டு இருக்கேன். நிறைய பேருக்கு உதவி செய்கிறான்.. ரொம்ப நல்ல விஷயம்.. இப்ப இருக்கவங்க யாருக்கும் அந்த மனசு வராது.. ஆனா உனக்கு கொடுக்கணும்னு அந்த மனசு இருக்கு.. நீ வாங்குற பணத்தை மக்களுக்கு நல்ல விஷயத்திற்காக உதவி செய்யற.. இப்ப பாலாவை ரசிக்கக்கூடிய ஒரு ஆளா நான் மாறிட்டேன்’ என பேசி இருக்கிறார் இளையராஜா.

எல்லோரும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ரசிக்கும் போது இளையராஜாவே ரசிக்கக் கூடியவராக பாலா மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.