அலப்பறை காம்போ இஸ் பேக்.. இணைந்த வடிவேலு-பிரபு தேவா.. காமெடி சரவெடி கன்ஃபார்ம்..

.இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் பிரபுதேவா. பிளக்ஸ் சிபில் உடலை வளைத்து தனது நடனத் திறமையை வெளிப்படுத்தக் கூடியவர். நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறன் கொண்டவர். தற்போது பாலிவுட்டில் செட்டில் ஆனாலும் அவ்வப்போது தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் பிரபுதேவா அடுத்ததாக வடிவேல் உடன் கூட்டணி போட உள்ளார்.

சங்கர் இயக்கத்தில் உருவான ’காதலன்’ திரைப்படத்தின் மூலம் இவர்கள் கூட்டணி உருவானது. அன்றிலிருந்து ரசிகர்களின் ஃபேவரிட் காம்போவாக மாறியது. அதன் பிறகு ’மனதை திருடிவிட்டாய்’ திரைப்படம் இந்தக் கூட்டணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று விட்டது என்றே சொல்லலாம். அதில் வரும் ’ஒய் ப்ளட் சேம் பிளட்’ , காமெடி ரசிகர்களால் இன்றும் மறக்க முடியாத ஒன்று. அதன் பிறகு விஜயை வைத்து பிரபுதேவா இயக்கிய போக்கிரி படத்தின் காமெடி ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறது.

#image_title

அதே போல வில்லு படத்திலும் இது தொடர்ந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் வடிவேலு தற்பொழுது பிரபு தேவாவுடன் இணைந்திருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேலுவின் வாயில் விரல் விட்டு ஆட்டினார். அதை பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். அப்படி இயற்கையாகவே இவர்கள் இருவருக்கும் இடையில் காமெடி கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்.

அப்படி இருக்கையில் தற்போது கே.ஆர்.ஜி கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில் வடிவேலுவும், பிரபுதேவாவும் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைய உள்ளனர். இந்த படத்திற்கான பூஜை துபாயில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திரை பிரபலங்கள் லைக்கா நிறுவனம் தயாரிப்பாளர் சுபாஷ் கரன், நடிகர் ஜீவா, ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா, இயக்குனர் நித்திஷ் சகாதேவ் ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஸ்டண்ட் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் இயக்குகிறார். ஆண்டனி இந்த படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். மேலும் இப்படத்தில் அனிமல் படத்தில் தூள் கிளப்பிய நடிகர் பப்லு பிரிதிவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படத்தின் நடிக்க உள்ள பிற நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் போன்ற அப்டேட்டுகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.