கருப்புக்கு ஆப்படித்த லோகேஷ் கனகராஜ்!.. சூர்யாவுக்கு ஒரு ஹிட்டு கிடைக்காது போல!..
Karuppu: நடிகர் சூர்யாவுக்கு கடந்த பல வருடங்களாகவே ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. சிங்கம் 2-வுக்கு பின் அதுபோல ஒரு மெகா ஹிட் படத்தை அவர் கொடுக்கவில்லை. இடையில் சூரரைப் போற்று, ஜெய்பீம் ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு பிடித்திருந்தாலும் அவை தியேட்டரில் வெளியாகவில்லை. மாறாக ஓடிடியில் வெளியானது.
வித்தியாசமான புது முயற்சி என நினைத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்கிற படத்தில் நடித்தார் சூர்யா. இந்த படத்திற்காக கடுமையான உழைப்பையும் கொடுத்திருந்தார். ஆனால் படத்திற்கோ அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது. இதனால் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ரெட்ரோ படமும் அவருக்கு ஹிட் படமாக அமையவில்லை. சுமாரான வசூலை கொடுத்தது..

ரெட்ரோ படத்திற்குப் பின் ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்கிற படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. இந்த படத்தில் கருப்பண்ணசாமி மற்றும் வழக்கறிஞர் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. டீசரை பார்க்கும்போது கருப்பு ஒரு ஜனரஞ்சகமான கமர்சியல் மசாலா திரைப்படம் என்பது புரிந்தது. மேலும் இப்படம் கண்டிப்பாக சூர்யாவுக்கு ஒரு ஹிட் படமாக அமையும் என்று பலரும் நினைக்கிறார்கள்.
இந்தப் படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் படத்தின் ஓடிடி உரிமை இதுவரை விற்கப்படவில்லை. இந்த படத்தை சூர்யாவின் உறவினர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர் பிரபு தயாரித்திருக்கிறார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தார் எஸ்.ஆர்.பிரபு. மேலும் கைதி 2 படத்தின் ஓடிடி உரிமையை கேட்டு வருவார்கள். அப்போது தன்னுடைய கருப்பு படத்தையும் சேர்த்து வியாபாரம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்தார் பிரபு.

ஆனால் அடுத்து ரஜினி, கமல் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்கப் போவதால் கைதி 2 படம் இப்போதைக்கு இல்லை என ஆகிவிட்டது. எனவே கருப்பு படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்ய முடியாமல் முழித்து வருகிறார் எஸ்.ஆர்.பிரபு. கருப்பு படம் மட்டுமல்ல. சூர்யாவின் தம்பி கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 படத்தையும் எஸ்.ஆர்.பிரபுதான் தயாரித்திருக்கிறார். இந்த படத்தின் ஓடிடி உரிமையும் இதுவரை விற்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


