ரீ-ரிலீஸிலும் வசூலை குவிக்கும் கேப்டன் பிரபாகரன்!.. 3 நாள் கலெக்‌ஷன் ரிப்போர்ட்..

நடிகர் விஜயகாந்தின் 100வது திரைப்படமாக வெளியான கேப்டன் பிரபாகரன் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. 1991ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விஜயகாந்தின் திரை வாழ்வில் ஒரு முக்கியமான படமாக அமைந்தது. இந்த படத்திற்கு ஆர்.கே செல்வமணி அமைத்திருந்த கதை, திரைக்கதை ரசிகர்களை கட்டிப் போட்டது. இந்த படத்தில்தான் மன்சூர் அலிகானை வில்லனாக அறிமுகம் செய்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் ரசிகர்களிடம் கைதட்டலை பெற்றது.

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை கேரளாவை ஒட்டியுள்ள காடுகளில் எடுத்தார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற எல்லா சண்டை காட்சிகளுமே ஆக்சன் காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த படத்தில் அசத்தலான வசனங்களை எழுதியிருந்தார் லியாகத் அலிகான். அதை கச்சிதமாக பேசி அசத்தியிருந்தார் விஜயகாந்த்.

#image_title

இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி ரீரிலிஸ் செய்யப்பட்டது. தமிழகத்தில் சுமார் 100 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. ரீ ரிலீஸிலும் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. முதல் நாள் இப்படம் 42 லட்சமும் இரண்டாவது நாள் 86 லட்சமும் வசூலாகி இருக்கிறது. மேலும் மூன்றாவது நாளான நேற்று இப்படம் ஒரு கோடியே முப்பது லட்சத்தை வசூல் செய்து அசத்தியிருக்கிறது.

இந்தப் படத்தை விஜயகாந்த் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சிறுவர்களும் பார்த்து ரசித்து வருகிறார்கள். விஜயகாந்தின் படங்களுக்கு இன்னமும் மதிப்பிருப்பது இந்த படத்தின் வசூல் மூலம் தெரிய வந்திருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.