எந்த ஹீரோவும் இல்ல!.. வசூலில் கூலிதான் நம்பர் ஒன்!.. தெறிக்கவிட்ட திருப்பூர் சுப்பிரமணியம்….

Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான திரைப்படம்தான் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் சாகிர், சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
லியோ படத்திற்கு பின் கூலி படத்திற்கே அதிக அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜுடன் ரஜினி கூட்டணி அமைத்தது. இந்த படம் 1000 கோடி ஆயிரம் கோடி வசூல் செய்யும் முதல் தமிழ் சினிமாவாக இருக்கும் என பலரும் பேசினார்கள். ஆனால் படத்திற்கு சென்சார் போர்டு ஏ சர்டிபிகேட் கொடுத்தது. அப்போதே ஆயிரம் கோடிக்கு வாய்ப்பில்லை என பலரும் நினைத்தார்கள். மேலும் வெளியான முதல் நாளே இப்படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் வந்தது.

coolie
coolie

தெளிவான கதை, திரைக்கதை இல்லை.. நிறைய லாஜிக் தவறுகள்.. எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்றெல்லாம் விமர்சனங்கள் வந்தது. படம் வெளியாகி ஐந்து நாட்களில் இப்படம் 404 கோடி வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அதன்பின் வசூல் கணக்கு பற்றி சன் பிக்சர்ஸ் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

இப்படம் அதிகபட்சம் 500 கோடியை வசூல் செய்திருக்கலாம் என சொல்கிறார்கள். ஏனெனில், முதல் வாரத்தில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் முதல் வாரத்திலேயே கூலி படத்திற்கு வசூல் குறைந்தது. குறிப்பாக பி,சி சென்டர்களில் கூலி படம் காத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய விநியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ‘பெரிய நடிகர்களின் படங்களில் கூலிதான் அதிக வசூலை கொடுத்திருக்கிறது. தக் லைப், இந்தியன் 2, கங்குவா போன்ற படங்கள் வசூலை கொடுக்கவில்லை. ரெட்ரோவும் சுமாரான வசூலை கொடுத்தது. ராயன் படமும் பெரிய வசூலை கொடுக்கவில்லை. கூலி படம்தான் அதிக வசூலை கொடுத்திருக்கிறது. அதேபோல் அஜித்தின் குட் பேட் அக்லி படமும் நல்ல வசூலை கொடுத்திருக்கிறது’ என பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.