Madharasi: அஜித் மன்றமே வேணானு சொன்னப்போ!.. மதராஸி பட விழாவில் ஹைப் ஏத்திய சிவகார்த்திகேயன்

Madharasi: நேற்று சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் ஆகியோர் நடிப்பில் இந்தப் படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இது அனிருத் சிவகார்த்திகேயன் காம்போவில் உருவாகும் எட்டாவது படமாகும்.

மூணு படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தாலும் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து மொத்தம் ஏழு படங்களுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இவர்கள் கூட்டணி எப்போதுமே வெற்றிக்கூட்டணியாகவே அமைந்திருக்கிறது. அந்த வகையில் மதராஸி படமும் வெற்றிப்படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படம்தான் மதராஸி.

அதனால் இந்தப் படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் முடிந்து கிணத்துல போட்ட கல்லாகத்தான் படத்தை பற்றிய எந்தவொரு அப்டேட்டும் இல்லாமல் இருக்க ஓரு பக்கம் முருகதாஸும் பல பேட்டிகளில் படத்தை பற்றி பேசுவார் என்று எதிர்பார்த்தால் மதராஸி படத்தை தவிற இதற்கு முன் அவர் வேலை பார்த்த படங்களை பற்றியே தான் பேசிக் கொண்டிருந்தார்.

சிவகார்த்திகேயனும் இந்தப் படத்தை பற்றி எங்கேயும் பேசவில்லை. ஆனால் டிரெய்லர் நேற்று வெளியாகி ஒரு ஹைப்பையே ஏற்படுத்திவிட்டது. டிரெய்லரை பார்க்கும் போது ஒரு பக்கா ஆக்‌ஷன் படமாகத்தான் இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று நடந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசும் போது அடுத்த தளபதி என்று சொல்பவர்களின் வாயை அடைத்துவிட்டார்.

அதாவது அடுத்த தளபதி நான் என்று நினைத்திருந்தால் விஜய் சார் என் கையில் துப்பாக்கியை கொடுத்திருக்க மாட்டார். அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு ஃபேன்ஸ் பலம் அதிகம். அவர் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் கடைசி படம். அதன் பிறகு அரசியலுக்கு போகிறேன் என்று சொன்னாலும் அரசியலை நோக்கியும் அவருடைய ஃபேன்ஸ் படையெடுத்துவிட்டனர்.

அதே போல் அஜித் சாரும் மன்றத்தை கலைத்தாலும் இன்று வரை நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என அவருக்காக இன்று வரை ரசிகர்கள் கூடவே இருக்கிறார்கள். இப்படியான ரசிகர்களை கொண்டவர்கள் அவர்கள் என நேற்றைய விழாவில் பேசி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.