கமல் பட இயக்குனரிடம் கதை கேட்ட ரஜினி!.. அப்போ லோகேஷ் கனகராஜ் என்னாச்சி?…
Rajini: தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னமும் நம்பர் ஒன் நடிகராக கலக்கி வருகிறார். 74 வயதிலும் ஹீரோவாக நடித்து வரும் நடிகர் இவர். இன்னமும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் படங்கள் எல்லாம் வசூலை வாரி குவித்து வருகிறது.
சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி படம் வெளியானது. எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் வசூலில் குறை வைக்கவில்லை. இப்படம் 600 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இன்னமும் ரஜினி படங்கள் மீது ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பும், ஈர்ப்பும், ஆர்வமும் குறையவே இல்லை. எல்லா வயது தரப்பினரும் ஆர்வமாக சென்று பார்க்கும் படியே ரஜினி படங்கள் இருக்கிறது.
ரஜினி இப்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் 2 படத்திற்கு பின் ரஜினி யாரின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த படத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்து நடிக்க போவதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் இது தொடர்பான அறிவிப்பு ஜெயிலர் 2 ரிலீஸுக்கு பின்னரே வெளியாகும் என சொல்லப்படுகிறது.

ஒருபக்கம், மகாராஜா படத்தை இயக்கிய நித்திலன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்ததாகவும் அதை டெவலப் செய்ய சொல்லி இருக்கிறார் எனவும் செய்திகள் வெளியானது. தற்போது மகாநடி மற்றும் கல்கி ஆகிய படங்களை இயக்கிய நாக் அஸ்வின் ரஜினியிடம் ஒரு கதை சொல்லி இருக்கிறார் எனவும், அது ரஜினிக்கு பிடித்துப் போகவே முழு கதையும் தயார் செய்யும்படி கூறியிருக்கிறார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் படம் துவங்க எப்படியும் இன்னும் 10 மாதங்களுக்கு மேல் ஆகலாம். எனவே ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு வேறொரு இயக்குனர் படத்தில் ரஜினி நடிப்பார் என சொல்லப்படுகிறது. அது நித்திலன் சாமிநாதனா இல்லை நாக் அஸ்வினா அல்லது வேறு இயக்குனரா என்பது விரைவில் தெரியவரும். கல்கி படத்தில் கமலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


