50 வருஷமா ஹீரோ!… ரஜினி செய்யாத சாதனையை செய்த பாலகிருஷ்ணா.. ஜெய் பாலய்யா!..

Balakrishna: தெலுங்கு சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர் நந்தமூரி பாலகிருஷ்ணா. ரசிகர்கள் இவரை சுருக்கமாக பாலையா என அழைக்கிறார்கள்
. ஆந்திர சினிமாவிலும், அரசியலிலும் கொடிகட்டி பறந்த என்.டி ராமராவின் மகன் இவர்.

1974 வருடம் வெளிவந்த டடாமா(Tatamma Kala) காலா படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார். இவர் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த 50 வருடங்களிலும் இவர் ஹீரோவாக மட்டுமே நடித்திருக்கிறார். 90களில் இவரின் தெலுங்கு திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது.

ஆந்திர சினிமாவில் அதிக பன்ச் டயலாக் பேசி நடிக்கும் நடிகர் இவர். பன்ச் வசனம் மட்டுமல்ல இவரின் படங்களில் வசனங்கள் அனல் தெறிக்கும்.. சண்டைக் காட்சிகளும் அனல் பறக்கும்.. இவருக்கென ஆந்திராவில் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆந்திராவில் மட்டும் மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் இவரின் படங்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.

இவரின் அகண்டா திரைப்படம் அமெரிக்காவில் வெளியான போது தியேட்டரில் சேரை எல்லாம் போட்டு உடைத்தார்கள். எனவே தியேட்டர் நிர்வாகம் ரசிகர்களை வெளியேற்றிய சம்பவம் எல்லாம் நடந்தது
. இவரின் படங்களில் லாஜிக் இல்லாத பல காட்சிகள் இருக்கும். இவர் கையசைத்தாலே ரயில் கூட பின்னால் செல்லும். இது போன்ற காட்சிகளால் ட்ரோலில் சிக்கி இருக்கிறார் பாலையா. ஆனாலும் அதையே தனது ஸ்டைலாக மாற்றிக்கொண்டார்.

balakrishna
#image_title

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த வரும் ஜெயிலர் 2 படத்திலும் பாலையா ஒரு முக்கிய இடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்தே செய்யாத ஒரு சாதனையை பாலையா செய்திருக்கிறார். நடிகர் ரஜினி சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டாலும் அவர் ஹீரோவாக நடிக்க துவங்கியது பைரவி படத்திலிருந்துதான். அதற்கு முன் சின்ன சின்ன வேடங்கள், வில்லன் என பல கதாபாத்திரங்களும் நடித்திருக்கிறார். ஆனால் பாலையாவோ முதல் படத்திலிருந்து இப்போது வரை ஹீரோவாக மட்டுமே நடித்திருக்கிறார்.

எனவே, இந்திய சினிமாவில் 50 வருடங்கள் ஹீரோவாக நடித்தவர் என்ற பெருமைக்காக லண்டனைச் சேர்ந்த ஓல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்திருக்கிறார். இதை அவரின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் கூட தெலுங்கில் பாலையா நடித்து சூப்பர் ஹிட் அடித்த பகவன் பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.