வாழ்வா சாவா போராட்டத்தில் முருகதாஸ் – எஸ்.கே!.. மதராஸி கை கொடுக்குமா?…

சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் மதராஸி. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில் படத்திற்கான அப்டேட்டை அடுத்தடுத்து பட குழு கொடுத்து வருகிறது. ஏற்கனவே இதன் டீசர் மக்களின் கவனத்தை பெற்றது. அடுத்ததாக வெளியான ’சலம்பல’ பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் ’மதராஸி’ படத்தின் டிரைலர் வெளியானது.

அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் மாஸாக இந்த ட்ரெய்லரில் சிவகார்த்திகேயன் பக்கா ஆக்ஷன் ஹீரோ போல் இருக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் வாழ்வா சாவா போராட்டம் தான் என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சினிமா விமர்சகர் பாலாஜி பிரபு கூறியுள்ளார் மேலும் அவர் கூறியதாவது, ”ட்ரைலரில் துப்பாக்கி யார்கிட்ட இருந்தாலும் வில்லன் நான் தான்டா என்ற டயலாக் மக்களிடம் நன்றாகவே கனெக்ட் ஆகி உள்ளது. வித் யுத் ஜமால் இந்தப் படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார்”.

”துப்பாக்கி படத்தில் நடித்திருப்பார் மற்றும் கோட் படத்தின் விஜய் துப்பாக்கியை சிவகார்த்திகேயன் கிட்ட கொடுத்திருப்பார். இதையெல்லாம் கனெக்ட் செய்யும் விதமாக இருந்தது. அமரன் படத்தின் கதை உண்மையாக இருந்தது. கதையோடு அதிரடி காட்சிகள் இருந்ததால் மக்கள் அதனை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் சிவகார்த்திகேயன் ரெண்டாவது படத்தில் முருகதாஸை நம்பி ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார்”.

#image_title

”முருகதாஸ் ஒரு சிறந்த இயக்குனர் இருந்தபோதும் சமீப காலமாக அவரின் எந்த படங்களும் சாதாரண வெற்றியைக் கூட பெறவில்லை. அட்டர் பிளாப் தான். எல்லாருக்கும் தோல்வி என்பது ஏதாவது ஒரு சூழ்நிலையில் வரத்தான் செய்யும். அது தர்பார் படத்திலிருந்து ஆரம்பித்தது. முருகதாஸை பொருத்தவரை தோல்வி என்று வந்தால் நடிகரை கை காண்பித்து விடுவார். ஆனால் இந்தப் படத்திற்கு முழுக்க முழுக்க அவரே பொறுப்பேற்று எடுத்துள்ளார்”.

”சிவகார்த்திகேயனை பொறுத்தவரை இந்த படம் வெற்றி அடைந்தால் அவரும் அடுத்த கட்டத்திற்கு நகர்வார். மொத்தத்தில் முருகதாசுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் மிக மிக முக்கியமான படம். ட்ரெய்லர் வழக்கமான கமர்ஷியல் ஃபார்முலாவை தான் கொண்டிருக்கிறது. இருந்தாலும் படம் வெளியான பின்பு தான் இது இருவருக்கும் கை கொடுத்ததா? அல்லது கைவிட்டதா? என்பது தெரியும்”. என்று கூறியுள்ளார்

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.