அடுத்த விஜய்னு சொல்லி ஆப்படிச்சிட்டாங்க!… ஹிட் அடிக்காத மதராஸி டிரெய்லர்…
Madharaasi: சினிமாவில் எந்தப் பின்னணி இல்லாமல் நுழைந்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன், ரஜினி முருகன்இ வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்கள் இவரை முன்னணி நடிகர்களில் ஒருவராக மாற்றியது, மிகவும் குறுகிய காலகட்டத்தில் இவருக்கு முன் சினிமாக்கு வந்த பல சீனியர் நடிகர்களையும் ஓவர் டேக்ஸ் செய்து மேலே போனார், இவரின் வளர்ச்சியை பார்த்து பல நடிகர்களும் பொறாமைப்பட்டார்கள்.
இப்போதும் ரஜினி, அஜித், விஜய் ஆகியோருக்கு அடுத்து அதிக சம்பளம் வாங்கும் நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். மேலும் ரஜினி, விஜய்க்கு பின் குழந்தைகளுக்கு பிடித்த நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார். அதுவே அவரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி வரை வசூல் செய்தது. இதுவரை ரஜினி, விஜய், அஜித்துக்கு பின் இந்த வசூலை யாரும் தொட்டதில்லை. அமரனுக்கு பின் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகியுள்ளது. இந்நிலையில்தான் நேற்று படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது.
சிவகார்த்திகேயனின் காதலியை வில்லன் குரூப் பிடித்து வைத்துக்கொண்டு பிளாக்மெயில் செய்வது போலவும், அவரை காப்பாற்ற சிவகார்த்திகேயன் முயற்சி செய்வது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ட்ரெய்லரில் அசத்தலான ஆக்சன் காட்சிகளும் இடம் பெற்றிருந்தது அதேநேரம் ட்ரைலர் வெளியாகி 12 மணி நேரம் ஆன பின்பும் யூடியூபில் வெறும் 28 லட்சத்து 50 ஆயிரம் பேர் மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.
அதற்கு காரணம் மதராஸி படத்திற்கு படக்குழு பெரிய அளவில் புரோமோஷன் செய்யவில்லை. ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் ட்ரைலர் வீடியோ பெரிய வரவேற்பு பெறவில்லை என்பதால் படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


