Coolie: கூலி பட கல்யாணியின் அக்கா சன் டிவி சீரியல் நடிகையா?.. அட இவரா அது…
Coolie: ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் கூலி படத்தில் வில்லியாக கலக்கிய நடிகை ரச்சிதா ராமின் அக்கா சன் டிவியை சேர்ந்த முக்கிய சீரியல் நடிகை என்ற ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தில் ரஜினிகாந்த், செளபீன் ஷாகீர், நாகார்ஜூனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைப்பு செய்திருந்தார்.
ஆரம்பத்தில் லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் கண்டிப்பாக ரஜினிகாந்த் கூட்டணியில் 1000 கோடி வசூல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக படம் முடிந்த முதல் காட்சிக்கு பின்னர் நெகட்டிவ் விமர்சனங்களையே படம் அதிகமாக குவித்தது.
இதனால் படத்தின் வசூலும் சரமாரியாக குறைந்தது. 10 நாட்களை கடந்தும் படத்தின் வசூல் 500 கோடிக்குள் மட்டுமே இருக்கிறது. ஆனால் இதுவரை தமிழ் சினிமாவின் மற்ற படங்களின் வசூலை கூலி திரைப்படம் முறியடித்துவிட்டது.

இப்படத்தின் அறிவிப்பு வந்த போது மற்ற நடிகர்களின் கதாபாத்திரம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. இதில் எதிர்பார்க்கப்பட்ட போல, செளபீன் ஷாகீர் தன்னுடைய நடிப்பில் மிரட்டினார். சண்டை இல்லாமல் தன்னுடைய நடிப்பால் ஆச்சரியப்படுத்தினார்.
அதுபோலவே ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பலரும் கேரக்டர் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதில் யோசிக்க முடியாத அளவில் படத்தில் இடம்பெற்ற கல்யாணி கேரக்டர் கிட்டத்தட்ட விக்ரம் படத்தின் டீனா கேரக்டரை போலவே சூப்பர் எண்ட்ரியாக அமைந்தது.

இந்த கல்யாணி கேரக்டரில் ரச்சிதா ராம் நடித்திருந்தார். அவருடைய நடிப்பு மிரள விட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இந்நிலையில் ரச்சிதா ராமின் அக்கா சன் டிவியின் பிரபல நடிகை நித்யா ராம் எனக் கூறப்படுகிறது.
தமிழ் மற்றும் கன்னட சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் நித்யா ராமின் முக்கிய சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிய நந்தினி. இரண்டு பாகங்களாக ஒளிபரப்பாகிய நந்தினி சன் டிவி ரசிகர்களிடம் இன்றளவும் பிரபலமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


