அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2025: களமிறங்கும் இளம் ஜாம்பவான்கள்! - வெற்றி யாருக்கு?
இந்த ஆண்டின் கடைசி க்ராண்ட்ஸ்லாம் தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்குகிறது.
ஆண்டுதோறும் உலகம் முழுவதும் பல நாடுகளில் ஓபன் டென்னிஸ் க்ராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடைபெறும் நிலையில், அதில் முக்கியம் வாய்ந்த போட்டிகளில் ஒன்றாக இருப்பது அமெரிக்க ஓபன் டென்னிஸ். இந்த ஆண்டின் கடைசி க்ராண்ட்ஸ்லாம் போட்டியாக நடைபெறும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி முதல்முறையாக இந்த ஆண்டு மொத்தம் 15 நாட்கள் நடக்க உள்ளது. இதுவரை 14 நாட்கள் மட்டுமே நடத்தி வந்தனர்.
இந்த அமெரிக்க ஓபன் டென்னிஸில் ஆடவர் பிரிவு, மகளிர் பிரிவு, இரட்டையர் பிரிவு என மூன்று பிரிவுகளில் பல நாடுகளை சேர்ந்த டென்னிஸ் வீரர்கள் மோதிக் கொள்கின்றனர். இதில் மகளிர் பிரிவில் ஆர்யனா சபலேன்கா, ஸ்வியாடக், கோகோ கஃப், மேடிசன் கீய் உள்ளிட்டோரின் ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல ஆடவர் பிரிவில் சமீபத்தில் கலக்கி வரும் இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், அலெக்ஸாண்டர் வெரவ், செர்பியாவை சேர்ந்த நோவாக் ஜோகோவிச் பெரும் எதிர்பார்க்கப்படும் வீரர்களாக உள்ளனர்.
Edit by Prasanth.K
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


