Madharasi: ஏஆர் முருகதாஸின் ஆர்வக்கோளாறு.. கிணத்துல போட்ட கல்லா மாறிய ‘மதராஸி’

Madharasi: ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் மதராஸி. இந்தப் படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. அமரன் என்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் என்பதால் மதராஸி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் படத்தை பற்றி ஏஆர் முருகதாஸை தவிர யாரும் பேட்டி கொடுத்ததாக தெரியவில்லை.

வெறும் கிணத்துல போட்ட கல்லாகத்தான் இருக்கிறது. ஆனால் லோகேஷை போல ஏஆர் முருகதாஸும் பேட்டிகளில் மதராஸி படத்தை தவிற தீனா, கஜினி, துப்பாக்கி போன்ற படங்களைப் பற்றித்தான் பேசி வருகிறார். இன்னொரு பக்கம் தொடர்ந்து தோல்விகளையே கொடுத்து வந்த முருகதாஸுக்கும் இந்தப் படம் பெரிய சவாலாகத்தான் இருக்கப் போகிறது.இந்தப் படம் வெற்றியடைந்தால்தான் அவர் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும்.

ஒரு வேளை நெகட்டிவாக ரிசல்ட் வந்தால் முருகதாஸின் நிலைமை அவ்வளவுதான். அதுமட்டுமில்லாமல் மதராஸி படம் என்ன மாதிரியான கதையாக இருக்கும்? ஒரு வேளை வடக்கன் சம்பந்தப்பட்ட கதையாக இருக்குமா என்றெல்லாம் கேள்விகளை கேட்டு வருகின்றனர். ஆனால் மதராஸி துப்பாக்கி மாதிரியான படமாக இருக்கும். துப்பாக்கி 2 மாதிரி கூட இருக்கலாம் என முருகதாஸ் கூறியிருக்கிறார்.

இது சிவகார்த்திகேயனுக்கு ஒரு வித பிரச்சினையை கூட ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே கோட் படத்தில் துப்பாக்கியை கையில் கொடுத்து இத புடிங்க சிவா என விஜய் சிவகார்த்திகேயனை பார்த்து சொன்னதில் இருந்து சிவகார்த்திகேயனுக்கு சிக்கலாகத்தான் இருந்தது. ஏனெனில் அடிப்படையில் சிவகார்த்திகேயன் ரஜினி ரசிகர் என அனைவருக்கும் தெரியும். இதில் அடுத்த விஜய் சிவகார்த்திகேயன் என்று சொன்னதும் ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்கள் கொந்தளித்து விட்டனர்.

இதில் முருகதாஸும் துப்பாக்கி 2 என மதராஸியை சொன்ன பிறகு கூட கொஞ்சம் ரஜினி ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதற்கிடையில் சிவகார்த்திகேயனும் சாமர்த்தியமாக கூலி படத்தை பார்த்துவிட்டு எந்தவொரு விமர்சனமும் தெரிவிக்கவில்லை. அதே சமயம் விஜய் அரசியலை பற்றியும் வாய்திறக்கவில்லை. இன்னொரு பக்கம் மதராஸி படத்துக்காக சிவகார்த்திகேயனும் எந்தவித பேட்டியும் கொடுக்கவில்லை. இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு திருப்தி அளித்ததா இல்லையா என்பதை செப்டம்பர் 5 ஆம் தேதி பார்ப்போம் என இந்த தகவலை செய்யாறு பாலு தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.