Coolie Movie: ஓவர் பில்டப்.. பெரிய படங்களின் தொடர் தோல்வி! இதான் காரணமா?

Coolie Movie: அனைவரும் பெரிய அளவில் எதிர்பார்த்த திரைப்படம் கூலி. பேன் இந்தியா படமாக இந்தப் படம் உருவாக கடைசியில் கலவையான விமர்சனத்தையே பெற்றது. வசூலில் தயாரிப்பு தரப்புக்கு பெரிய அளவு நஷ்டம் இல்லையென்றாலும் படத்தை பற்றி நெகட்டிவ் கருத்துக்களும் வரத் தொடங்கியது. லோகேஷ் இயக்கத்திலேயே கைதி படத்துக்கு மட்டும்தான் நெகட்டிவ் விமர்சனங்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு அவர் எடுத்த படங்கள் எல்லாம் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறவில்லை என்பதுதான் உண்மை. கூலி படம் மட்டுமில்லாமல் இந்தாண்டு வெளியான பெரிய நடிகர்களின் படங்கள் எதுவுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சொல்லப்போனால் இந்த வருடம் மட்டும் ஜூலை மாதம் வரை கிட்டத்தட்ட 153 படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன.

அதில் 10 சதவீதம் படம் மட்டுமே வெற்றிப்பெற்ற திரைப்படங்களாக மாறியிருக்கின்றன. இதற்கு காரணம் தயாரிப்பு தரப்புக்கு என பெருமளவு தொகை செலவழிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் 80 சதவீதம் நடிகர்கள், டெக்னீசியன்களுக்கான சம்பளமாக சென்று விடுகிறது. மீதம் 20 சதவீதத்தில் மட்டுமே படத்திற்காக செலவழிக்கிறார்கள். இப்படி இருந்தால் சினிமாவின் நிலை என்னவாகும் என திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார்.

மேலும் இப்போதெல்லாம் யாரும் படம் எடுக்க முன்வருவதில்லை. பயந்து கிடக்கிறார்கள். அதனால் நடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் ஷேர் அடிப்படையில் படத்தில் நடிக்க முன்வந்திருக்கிறார்கள். இது ஒரு நல்ல மாற்றம். இனிமேல் இப்படித்தான் இருக்கும். சினிமாவில் நிலையும் மாறும் என திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். மேலும் கூலி படத்தை எடுத்துக் கொண்டால் நாகர்ஜூனாவுக்காக வடிவமைக்கப்பட்ட கேரக்டர்.

நாகர்ஜூனா எனும் போது ஓ நாகர்ஜூனா என வாயை பிளக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு அவரின் கேரக்டர் பெரிய அளவு இல்லை. இன்னொரு பக்கம் பாலிவுட் கிங் அமீர்கான். அமீர்கானும் இருக்கிறாரா? என்று வருகிறார்கள். ஆனால் அவருடைய கேரக்டர் தேவையில்லாதது என்பதை போல இருந்தது. பெரும்பாலான படங்களின் தோல்விக்கு முக்கிய காரணமே பேன் இந்தியா என்ற ஒரு விஷயம் தான்.

பேன் இந்தியா என்று வரும் போது அதற்கான பில்டப்களை கொடுக்க வேண்டியிருக்கிறது. இது எல்லாமே மாறும் போதுதான் சினிமா மாறும் என வலைப்பேச்சு பிஸ்மி கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.