உனக்கு இவ்வளவு சம்பளமா?… ஷாக்கான பாலச்சந்தர்!.. முத்து படத்தில் நடந்த சம்பவம்!..
Muthu Movie: இயக்குனர் பாலச்சந்தரின் கவிதாலயா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி ரஜினி நடித்து 1995ஆம் வருடம் வெளியான திரைப்படம்தான் முத்து.
இந்த படம் மலையாளத்தில் உருவான ‘தேன்மாவின் கொம்பத்து என்கிற படத்தின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
ஒரு கிராமத்தில் உள்ள ஜமீன்தாரின் வீட்டில் ரஜினி வேலைக்காரராக பணிபுரிவார். நாடகங்களில் நடித்து வரும் மீனாவோடு அவருக்கு காதல் ஏற்பட அவரை வீட்டிற்கு அழைத்து வருவார் ரஜினி. ஆனால் ஜமீன்தாரும் மீனாவை விரும்புவார். அதன்பின் என்ன நடந்தது? ரஜினி யார்? என்பதுதான் படத்தின் கதை.

மலையாள படத்தின் கதை என்றாலும் அதை தமிழுக்கு ஏற்றது போல அதுவும் ரஜினிக்கு ஏற்றது போல திரைக்கதையை அமைத்து அசத்தலாக எடுத்திருந்தார் கே.எஸ்.ரவிக்குமார். இந்த படத்தில் ஜெயபாரதி, சரத்பாபு, ராதாரவி, ரகுவரன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமானின் இசையில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக ‘ஒருவன் ஒருவன் முதலாளி’.. ‘தில்லானா தில்லானா’ போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார் ‘முத்து படம் துவங்கும் போது ‘உங்களின் சம்பளம் என்ன?’ என ரஜினி சார் என்னிடம் கேட்டார். ‘12 லட்சம்’ என சொன்னேன். அவர் 15 லட்சம் என எழுதி பாலச்சந்தர் சார் அலுவலகத்திற்கு அனுப்பி விட்டார். நான் பாலச்சந்தர் சாரை பார்க்க சென்றபோது ‘உனக்கு சம்பளம் 15 லட்சமா?’ எனக் கேட்டவர் ‘நானெல்லாம் 5 லட்சத்துக்கு மேல் சம்பளமே வாங்கினது இல்லடா’ என்ன சொன்னார்’ என சொல்லி இருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


