Siragadikka aasai: போர்டிங் ஸ்கூலுக்கு செல்லும் மனோஜ், மீனா… ரோகிணி அடுத்த ஆப்பு தயாராகிட்டு போலயே!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ஸ்ருதி தன் அம்மாவை திட்டிக்கொண்டு இருக்கிறார். நீத்துவுக்கு ரவி மீது ஒரு ஆசை இருக்கு எனக் கூற நீ மாப்பிள்ளையை அங்க விட்டுட்டு இருந்தா அவர் மாறிட்டா என்ன செய்றது எனக் கேட்கிறார். ஸ்ருதி அப்போ அச்சா மாறிட்டாரா எனக் கேட்க அவர் அம்மா என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியாக இருக்கிறார்.
நீத்துவுக்கு அப்படி ஒரு ஐடியா வந்தா கூட எனக்கு என்ன செய்றதுனு தெரியும். நீயா எதாவது பிரச்னை செஞ்சி நீத்துவை ரவிக்கு கீப்பா பண்ணிடாத. இப்படியே செஞ்சிட்டு இருந்தா நான் இங்க வரவே மாட்டேன் எனத் திட்டுகிறார். ஸ்ருதி சென்ற பின்னர் அவர் அப்பாவும் அம்மாவை இப்படி செய்யாதே எனத் திட்டுகிறார்.
மறுபக்கம் வீட்டில் மனோஜ் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருக்கிறார். என்ன விஷயம் எனக் கேட்க ஸ்கூலுக்கு போறேன் என கூறுகிறார் மனோஜ். இதில் முத்து இவன் என்ன மறுபடியும் ஆரம்பிக்கிறான் என்கிறார். உடனே, மனோஜ் என்ன போர்டிங் ஸ்கூலுக்கு பேச அழைத்ததாக சொல்கிறார்.
முத்து இவன் என்ன பேசிட போறான். திருடுறது எப்படி? ஏமாத்துறது எப்படி என்று தானே பேசுவான் என்கிறார். ரோகிணி எப்ப பாரு இப்படியே பேசிட்டு இருக்காரு. படிக்காதவங்களாம் அவரை நினைச்சு பொறாமைப்பட கூடாது என்கிறார்.
உடனே மீனா அவருக்கு யாரை பாத்தும் பொறாமை இல்ல. படிக்கலைனாலும் ஒருத்தரிடம் பேசுன சில நிமிடங்களில் பிடிச்சிடும் என்கிறார். மனோஜ் அப்போ பேசு எனக் கேட்க முத்து, மாதா, பிதா, குரு, தெய்வம் தான் முக்கியம். அப்பா, அம்மாவை மதிச்சு குரு சொல்றதை கேட்டாலே தெய்வம் நம்ம கூட இருக்கும் என்கிறார்.
எல்லாரும் கைத்தட்டுகின்றனர். உடனே மனோஜ் இதெல்லாம் நல்லாவே இல்லை என்கிறார். அப்போ நீ பேசு எனக் கேட்க மனோஜ் ஓவராக இங்கிலீஷில் பேசிக்கொண்டே இருக்கிறார். எல்லாரும் புரியாமல் அமைதியாக இருக்க நாய் குலைக்கிறது.
அவர் அமைதியாக நாயும் அமைதியாகி விடுகிறது. பின்னர் பேச நாய் குலைக்கிறது. இதில் எல்லாரும் சத்தமாக சிரிக்க கடுப்பாக்கும் மனோஜ் வெளியில் சென்று நாயை அடித்துவிட்டு வருகிறார். முத்து நாயை அடக்கிட்ட நாளைக்கு பசங்களை என்ன செய்ய போற என்கிறார்.

அந்த நேரத்தில் நாயோட ஓனர் வந்து மனோஜ் என்னோட நாயை கல்லால் அடிச்சி விட்டாரு. டாக்டரிடம் அழைச்சிட்டு போக காசு கொடுங்க எனக் கேட்கிறார். கடுப்பாகி மனோஜ் காசை கொடுக்க அவர் சென்று விடுகிறார். நாளைக்கு பிள்ளைகளை நினைச்சா தான் பயமா இருக்கு என்கிறார்.
ஸ்ருதி முத்து கூட பிள்ளைகளுக்கு சரியா தேவையானதை பேசுனான். மனோஜ் அவர் நான்தான் அறிவாளி என்னை போல எல்லாரும் இருக்கணும் என அவர் குறித்து பெருமையாக பேசுகிறார். இது எப்படி நல்லா இருக்கும் என ஸ்ருதி கலாய்த்துவிட்டு செல்கிறார்.
மறுபக்கம் மீனா சாப்பாடு போட்டு கொண்டு இருக்க முத்துவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். மீனா தனக்கு ஸ்கூலில் டெக்கரேஷன் ஆர்டர் கிடைத்து இருப்பதாக சொல்ல ஸ்ருதி வாழ்த்துக்கள் சொல்கிறார். பின்னர் ஸ்ருதி முத்துவை தன்னுடைய ரெஸ்டாரெண்ட்டுக்கு ரிவீயூ செய்ய சொல்ல அவரும் ஓகே என்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


