நான் மட்டும் என்ன தக்காளி தொக்கா?!.. சம்பளத்தை ஏற்றிய விஜய் விஜய் சேதுபதி…
Vijay Sethupathi: தமிழ் திரை உலகில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. துவக்கத்தில் குறும்படங்களில் நடித்து வந்தவர் பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் போன்ற திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் இயல்பாக நடித்து ரசிகர்களிடம் பெயர் வாங்கியவர் இவர்.
மற்ற நடிகர்களைப் போல தனது அழகான கதாநாயகி நடிக்க வேண்டும்.. மும்பையில் இருந்து நடிகை வர வேண்டும். படத்தில் நான்கு பாடல்களும் நான்கு சண்டை காட்சிகளும் இருக்க வேண்டும்.. பன்ச் வசனம் பேச வேண்டும்.. தன்னை மாஸாக காட்டிக் கொள்ள வேண்டும் என என்கிற ஃபார்முலாவுக்குள் சிக்காமல் நடித்ததால்தான் விஜய் சேதுபதியை எல்லோருக்கும் பிடித்துப் போனது.
அதனால்தான் அவரால் சூது கவ்வும், காதலும் கடந்து போகும் போன்ற திரைப்படங்களில் நடிக்க முடிந்தது. இப்போது வரை விஜய் சேதுபதி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால்தான் கடைசி விவசாயி போன்ற படங்களில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் அவரால் நடிக்க முடிகிறது. ஒரு கட்டத்தில் தெலுங்கு ஹிந்தி படங்களிலும் நடிக்க தொடங்கினார் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த சில படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. எனவே வில்லனாக நடிக்க துவங்கினார். அப்படி அவர் நடித்த மாஸ்டர், விக்ரம், ஜவான் போன்ற திரைப்படங்கள் வசூலை வாரி குவித்தது. சில வருடங்களுக்குப் பின் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த மகாராஜா திரைப்படம் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.
மேலும் பாண்டியராஜ் இயக்கத்தில் நடித்த தலைவன் தலைவி திரைப்படமும் அவருக்கு ஒரு வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் விஜய் சேதுபதி தனது சம்பளத்தை ஏற்றி இருக்கிறார். ஹீரோவாக நடிக்க 12 கோடி சம்பளம் வாங்கியவர், வில்லனாக நடிக்க 15 கோடி வரை சம்பளம் வாங்கினார். மகாராஜா ஹிட்டுக்கு பின் தனது சம்பளத்தை 18 கோடியாக உயர்த்தினார். தற்போது தலைவன் தலைவி சூப்பர் ஹிட் அடித்ததால் தனது சம்பளத்தை 25 கோடியாக ஏற்றிவிட்டார்.
விஜய் சேதுபதியாவது 2 ஹிட் படங்களை கொடுத்து விட்டு தனது சம்பளத்தை ஏற்றி இருக்கிறார். ஆனால் பல நடிகர்கள் தோல்வி படங்களை கொடுத்த பின்பும் 30 கோடி, 40 கோடி கொடுக்க வேண்டும் என கேட்கிறார்கள் என்கிறது சினிமா வட்டாரம். தனுஷ், சிம்பு போன்ற நடிகர்கள் 40 கோடி வரை சம்பளம் கேட்கிறார்கள். சிவகார்த்திகேயன் 60 முதல் 70 கோடி சம்பளம் கேட்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


