கமல் பார்த்த வேலை!.. கைதி 2-வுக்கு வந்த ஆப்பு!.. என்னப்பா சொல்றீங்க..

Kaithi2: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து 2019ம் வெளியான திரைப்படம்தான் கைதி. ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது. மாநகரம் படம் மூலம் வாய்ப்பு கொடுத்ததால் அதே நிறுவனத்திற்காக லோகேஷ் இயக்கிய படம்தான் கைதி. ஒரே நாள் இரவு நடக்கும் கதையில் பரபரவென திரைக்கதை அமர்ந்திருந்தார் லோகேஷ். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது.

இந்தப் படத்தை பார்த்துதான் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கவே ரஜினி சம்மதித்தார். இந்த படமும், மாஸ்டர் படமும் ஹிட் ஆனதால்தான் லோகேஷின் இயக்கத்தில் கமலும் நடிக்க முன்வந்தார். எனவே லோகேஷுக்கு அது கைதி ஒரு முக்கிய படமாக அமைந்தது.இந்த படத்தின் இறுதியில் இரண்டாம் பாகம் வருவது போல்தான் கதையை முடித்து இருப்பார்கள். எனவே கைதி 2 எப்போது வரும் என காத்திருக்கும் ரசிகர்கள் பலரும் இருக்கிறார்கள்.

kaithi

ஆனால் லோகேஷோ மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி என தொடர்ந்து வேறு படங்களை இயக்கினார். கூலி படத்திற்கு பின் கைதி 2 படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் உள்ளே நுழைந்த கமல் ‘நானும் ரஜினியும் நடிக்கும் படத்தை நீங்கள் இயக்குங்கள்.. ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது’ என சொல்லிவிட்டார். மேலும் கமலே கேட்டதால் கார்த்தியும் விட்டுக் கொடுத்துவிட்டார்.

சரி.. ரஜினி, கமல் படத்தை முடித்துவிட்டாவது லோகேஷ் கைதி2-வை இயக்குவாரா என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அதுவும் நடக்குமா என்பது சந்தேகம்தான். அதாவது கைதி 2 நடக்க வாய்ப்பே இல்லை என்றுதான் சிலர் சொல்கிறார்கள். ஏனெனில் அடுத்து லோகேஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். எப்படியும் அந்த படத்தில் ஆறேழு மாதங்கள் ஓடிவிடும். அதன்பின் ரஜினி கமல் படத்திற்கான கதை திரைக்கதையை முடிக்க வேண்டும். கண்டிப்பாக அப்படம் முடிய ஒரு வருத்திற்கும் மேல் ஆகிவிடும்.

அதுமட்டுமல்ல.. இரண்டு படங்களை எடுத்துக் கொடுப்பதுதான் லோகேஷுக்கும், ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் இருக்கும் ஒப்பந்தம். அப்படிப் பார்த்தால் மாநகரம், கைதி ஆகிய 2 படங்களை எடுத்துக் கொடுத்து விட்டார். எனவே கைதி 2-வை கண்டிப்பாக எடுத்துக் கொடுத்தே ஆக வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் லோகேஷை கட்டாயப்படுத்த முடியாது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது கைதி 2 படம் டேக்ஆப் ஆகுமா? ஆகாதா? என்பது காலத்தின் கையில்தான் இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.