மரண பீதியில் முருகதாஸ்!.. கண்டுகொள்ளாத சிவகார்த்திகேயன்.. மதராஸி பரிதாபங்கள்!…
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. இதனை எடுத்து விஜயின் கோட் படத்தில் செய்த கேமியோவால் அடுத்த தளபதி என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அவரைக் கொண்டாட ஆரம்பித்தனர். அமரன் படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். செப்டம்பர் ஐந்தாம் தேதி படம் வெளியாகும் எனப்பட குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மதராஸி திரைப்படம் ஏ.ஆர்.முருகதாஸுக்கு மரண பீதியை கொடுத்துள்ளது. ஏனெனில் அமரன் படத்தின் வசூலை கணக்கில் வைத்து மதராசி பட தயாரிப்பாளர் தியேட்டர் உரிமை விலையை நிர்ணயித்திருக்கிறார். இது அதிக தொகை என்பதால் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா என மூன்று மாநிலங்களில் தியேட்டர் உரிமையை வாங்க எந்த விநியோகஸ்தர்களும் இதுவரை முன் வரவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இருக்கிறார். என்று பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது

”ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு காலத்தில் ஹிட் பட இயக்குனராக இருந்தாலும் பல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தாலும் தற்போது அவரின் நிலை ரொம்பவே மந்தமாக இருக்கிறது. பாலிவுட்டிலும் சரி கோலிவுடிலும் சரி கடைசியாக அவர் வெற்றி கொடுத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. அதேபோல சிவகார்த்திகேயனுக்கும் அமரன் படம் 300 கோடிக்கு மேல் வசூலித்து அவருக்கு ஒரு பெரிய பெயரை பெற்று கொடுத்தது. ஒரு நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் நடிகர் கூட காம்பினேஷன் கரெக்டாக அமையவில்லை”.
”ஏதோ அனிருத் கொடுத்த பாட்டு ஹிட் ஆகி விட்டது. ஆனால் மக்களிடம் எதிர்பார்ப்பு இல்லை. வியாபாரமே மந்தமாகத்தான் இருக்கிறது. டிஜிட்டல் மற்றும் தமிழ்நாடு தியேட்டரிகல் உரிமை எதுவுமே விற்கவில்லை. இருந்தபோதிலும் நல்ல படங்களை மக்கள் என்றுமே கைவிட்டதில்லை. அதற்கு நிறைய உதாரணங்கள் சொல்லலாம். ஒரு படம் வந்தால் விமர்சனம் செய்ய தான் செய்வார்கள். ஆனால் இன்றைய காலத்தில் அது மிகவும் கடுமையாக இருக்கிறது”.

”இதனால் இயக்குனர்கள் பயப்படுகிறார்கள். சமீபத்திய தோல்வி படங்களை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் அந்தந்த இயக்குனர்கள் நிச்சயமாக நல்ல படைப்புகளை கொடுத்திருப்பார்கள். அடுத்து நல்ல படம் கொடுக்கலாம் என்று நினைக்கும் போது ஆர்டிஸ்ட் அவைலபிள் இருக்காது. அதற்கு சிறந்த உதாரணம் இயக்குனர் ஷங்கர்தான். அவருக்கு நடிகர் கிடைக்க மாட்டிக்கிறார்கள். தயாரிப்பாளரும் சிக்க மாட்டிக்கிறார்கள். அந்த வரிசையில் ஏ.ஆர்.முருகதாஸும் நல்ல இயக்குனர் தான்”.
”ஆனால் தொடர்ந்து தோல்வி கொடுத்ததால் மதராஸி பெரிய எதிர்பார்ப்பை பெற தவறிவிட்டது. மதராஸி திரைப்படம் வெற்றியடைந்தால் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ஜொலிப்பார். இது எல்லாம் நடக்குமா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்”. என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


