இந்த வருட தீபாவளிக்கு என்னென்ன படங்கள் ரிலீஸ்?… வாங்க பார்ப்போம்!..

2026 Movie Release: தீபாவளி, பொங்கல் என்றாலே சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். ஏனெனில் அப்போது நிறைய திரைப்படங்கள் வெளியாகும். பெரிய நடிகர்களும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் தங்களின் திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என ஆசைப்படுவார்கள். எனவே ஒன்றுக்கும் மேற்பட்ட பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது ரசிகர்களுக்கு அது திருவிழாவாக அமையும். ஆனால் கடந்த பல வருடங்களாகவே ரஜினி, விஜய், அஜித், கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் தீபாவளி பொங்கல் நேரங்களில் வெளியாவது இல்லை.

இந்த வருட தீபாவளியும் அந்த லிஸ்டில்தான் சேர்ந்திருக்கிறது. இந்த வருட தீபாவளிக்கும் பெரிய நடிகர்களின் எந்த படமும் வெளியாகவில்லை. மேலும், சிவகார்த்திகேயன், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், கார்த்தி உள்ளிட்ட எந்த நடிகரின் படமும் இந்த தீபாவளிக்கு வெளியாகவில்லை.

#image_title

சூர்யாவின் கருப்பு, கார்த்தியின் சர்தார் 2 ஆகிய இரண்டு படங்களும் தீபாவளி ரிலீஸுக்கு குறி வைத்தன. ஆனால் அந்த படங்களின் ஓடிடி உரிமைகள் இதுவரை விற்கப்படவில்லை. எனவே அந்த இரண்டு படங்களும் அடுத்த வருடம்தான் ரிலீஸ் என சொல்லப்படுகிறது. அதேநேரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் தீபாவளிக்கு வருவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில்தான் பிரதீப் ரங்கநாதனின் டியூட் மற்றும் எல்.ஐ.கே ஆகிய இரண்டு படங்களும் தீபாவளிக்கு ரிலீஸ் என இன்று காலை அறிவிப்பு வெளியானது. ஆனால் ஒரே நாளில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் எப்படி வெளியாகும்? கண்டிப்பாக இதில் ஒரு படம் தள்ளிப் போகும் என சிலர் கூறி வருகிறார்கள்.
ஒருபக்கம் ஹரிஷ் கல்யாணின் டீசல் திரைப்படமும் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

எனவே பைசன், டீசல் ஆகிய இரண்டு படங்களும் உறுதியான நிலையில் பிரதிப் ரங்கநாதனின் எல்.ஐ.கே அல்லது ட்யூட் என இந்த தீபாவளிக்கு மூன்று படங்கள் வெளியாகலாம் என கணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.