Singapenne: ரகு புராணம் இன்னும் முடிந்தபாடில்லை… சிங்கப்பெண் ஆனந்திக்கு எத்தனை தொல்லை?
சிங்கப்பெண்ணே தொடரில் இன்று நடந்தது என்ன? ரத்தினச்சுருக்கமாக கதையைப் பார்க்கலாமா…
ரகுவை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்த ஆனந்தி மற்றும் அன்புவிடம் டாக்டர் சொன்னது பேரதிர்ச்சியை உண்டாக்கியது. ரகுவுக்கு என்ன ட்ரீட்மென்ட் எல்லாம் கொடுக்கணுமோ எல்லாம் கொடுத்தாச்சு. இன்னும் கண்ணை முழிக்கல. சாயங்காலம் வரை டைம் இருக்கு. அதுக்குள்ள கண் முழிக்கலன்னா சின்ன ஆபரேஷன் பண்ணினா போதும். நிச்சயமா கண் முழிக்க வச்சிடலாம் என்கிறார் டாக்டர். அதுக்கு எவ்ளோ செலவாகும்னு அன்பு கேட்கிறான்.
3 லட்சம் என்கிறார் டாக்டர். 3 லட்சமா என்கிறாள் ஆனந்தி. ஆமா. ஆபரேஷன் உங்களுக்காக நான் ப்ரீயாகத் தான் பண்றேன். ஆனா அதுக்கான ஃபார்மாலிட்டீஸ், மருந்து செலவுக்குத் தான் இந்த 3 லட்சம். ரகுவின் வீட்ல இருந்து யாராவது வந்து இந்த ஆபரேஷன் பண்றதுல எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லைன்னு கையெழுத்துப் போட்டுக் கொடுக்கணும் என்கிறார் டாக்டர். அது நிச்சயமா முடியாது. ஆனந்திக்காக நீங்களே ஒரு சின்ன ஆபரேஷன் தானே டாக்டர். ஒரு உயிரும் காப்பாற்றப்படும்.
ஆனந்தியின் மானமும் காப்பாற்றப்படும்னு சொல்ல சரி. உங்களுக்காக பண்றேன். 3லட்சம் ரெடி பண்ணுங்கன்னு சொல்ல ஆனந்தியும், அன்புவும் கிளம்புகிறார்கள். இதற்கிடையில் அன்புவின் அம்மா, துளசி மார்க்கெட் போய் வரும்போது மகேஷ் பார்த்து விடுகிறான். காரில் ஏறச் சொல்கிறான். போற வழி தான் உங்க வீடு. நான் விடுறேன்னு சொல்ல துளசியும், அன்புவின் அம்மாவும் காரில் ஏறுகிறார்கள். மகேஷ் ஆனந்திக்கும், அன்புவுக்கும் கல்யாணம் பண்ணி வைங்கனு அன்புவின் அம்மாவிடம் சொல்கிறான். அது நடக்காதுன்னு சொல்ல வருகிறாள் அன்புவின் அம்மா (lalitha). ஆனால் துளசி அவளைப் பேசவிடாதபடி மகேஷிடம் வேறு வேறு கேள்விகளைக் கேட்கிறாள்.

கடைசியில் மளிகை சாமான் வாங்க வேண்டி இருக்கு. இறங்கிக்கறோம்னு இருவரும் காரில் இருந்து இறங்குகிறார்கள். அன்புவின் அம்மா என்ன துளசி நான் மகேஷ் சாரிடம் சொல்ல வரும்போது தடுத்துட்டேன்னு கேட்கிறாள். அதுக்கு மகேஷூக்கு ஆனந்தியோட கர்ப்பம் பற்றி தெரியாது. தெரிஞ்சா அன்பு தான் காரணம். உடனே கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லி கட்டாயப்படுத்துவாரு. எதுக்கு தேவையில்லாத பிரச்சனைன்னு சொல்ல… அதுவும் சரிதான் என்கிறாள் அன்புவின் அம்மா. இந்நிலையில் கிருஷ்ணரிடம் 3 லட்சத்துக்கு நான் எங்கே போவேன்னு வேண்டுகிறாள் ஆனந்தி.
கோகிலாவிடம் நடந்ததைச் சொல்ல அவ்வளவுதானே. உனக்கு நீ போட்ட நகை இருக்கு. அதை அப்பாவை அடகு வைக்கச் சொல்லி பணத்தை அனுப்பச் சொல்றேன் என்கிறாள். அதுக்கு ஆனந்தி மறுக்கிறாள். உன்னை மேலும் நான் கஷ்டப்படுத்த விரும்பல. என் தலையெழுத்துப்படி நடக்கட்டும். அந்த ரகு செத்தாலும் பரவாயில்ல. எனக்கு உன்னால பணம் வேணாம்னு சொல்கிறாள் ஆனந்தி. அதுக்கு அவசியமில்லன்னு சொல்லிக்கொண்டே வார்டன் வருகிறார். அடுத்து என்ன என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


