Siragadikka Aasai: ஸ்ருதியின் அம்மாவால் கடுப்பான ரவி… அடுத்த ஜோடிக்கு பிரச்னை பத்த வச்சாச்சு!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் முக்கிய தொடராக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
ரோகிணி தலையில் கை வைத்து கொண்டு உட்கார்ந்து இருக்க மனோஜ் என்ன ஆச்சு எனக் கேட்கிறார். தலை வலி எனக் கூற மனோஜ் நான் தைலம் எடுத்துட்டு வரேன் எனக் கூற ரோகிணி அதெல்லாம் எனக்கு எதுவும் வேண்டாம். ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்கிறார்.
இருந்தும் மனோஜ் தைலத்தை எடுக்க போக விஜயா உனக்கு தலை வலியா எனக் கேட்க இல்லம்மா ரோகிணிக்கு தான் என்கிறார். இதில் கடுப்பாகும் விஜயா ரோகிணி கன்னாபின்னாவென திட்டுகிறார். உனக்கு தலைவலி வந்தா நீ போய் தைலம் எடுத்துக்க வேண்டியதுதானே.
என் பையனை உனக்கு வேலை செய்ய வைக்கிறீயா? என்கிறார். ரோகிணி நான் வேண்டாம் எனத் தான் சொன்னேன். அவரா தான் போனேன் எனக் கூற மனோஜ் ஆமாம் அம்மா. அவ சொல்லவில்லை. நானா தான் வந்தேன் எனக் கூற இவ பொய் சொல்றதுக்கெல்லாம் நீயும் கூட்டு வைக்கிற எனத் திட்டிவிட்டு செல்கிறார்.
நீத்து ரெஸ்டாரெண்டுக்கு அடியாட்கள் வந்து டேபிளில் உட்கார்ந்து பீர் குடிக்க தொடங்குகின்றனர். இதில் கடுப்பாகும் நீத்து வந்து இங்க குடிக்க கூடாது. நீங்க போங்க எனக் கூற ஆனால் அந்த ரவுடிகள் இன்னும் மோசமாக பேச ரவி வந்து அவரிடமும் திமிராக பேசுகிறார்.
உடனே ரவி, இவங்களை சமாளிக்க நான் சரி வராது. அதுக்கு ஒருத்தன் இருக்கான் எனக் கூறி முத்துவுக்கு கால் செய்து வரச்சொல்கிறார். முத்து வந்து அடியாட்களில் ஒருவனுக்கு ஒரு அடி கொடுக்க மற்ற இரண்டு பேர் ஓடி விடுகின்றனர்.
ஒருவனை பிடித்து யார் இப்படி செய்ய சொன்னது எனக் கேட்க கேரளா அம்மா தான் என்கிறார். யார் அது என முத்து கேட்க ரவி மாமியார் என்கிறார். இதில் ரவி, நீத்து அதிர்ச்சியாகி விட முத்து இது உன் குடும்ப விஷயம் எனக் கூறி சென்று விடுகிறார்.
ரவி வீட்டிற்கு வந்து ஸ்ருதியிடம் கோபமாக உங்க அம்மாவுக்கு மூளை இருக்கா எனக் கேட்க அது அவங்களிடம் தான் கேட்கணும் என்கிறார். இதில் கடுப்பான ரவி கேள்விகளை கேட்க அதற்கு ஸ்ருதியும் காமெடியாக பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் மீனா, ரவிக்காக அவர் வேலை செய்ற இடத்தில் இப்படி செய்ய வேண்டாம் எனக் கூற சொல்ல ஸ்ருதியும் ஓகே சொல்லி விடுகிறார். பின்னர் ரவி ஸ்ருதியிடம் நீத்துவிடம் சாரி கேட்க சொல்ல அவர் கடுப்பாகி சென்று விடுகிறார்.
முத்து இப்படியெல்லாம் பேசாதே. அப்புறம் உனக்கு தான் பிரச்னை வரும். பொண்டாட்டியை தாஜா பண்ணி காரியம் சாதிக்கணும் எனக் கூற ரவி கடுப்பில் சென்று விடுகிறார். திரும்பி மீனாவை பார்க்க அவர் முத்துவை அடிக்க துரத்துகிறார். மீனா தண்ணியை முத்து மீது வீச அவர் நகர்ந்து விஜயா மீது தண்ணி பட்டு விடுகிறார்.
மனோஜ் ஷோரூமுக்கு அவருடைய பார்க் பிரண்ட் போர்டிங் ஸ்கூல் நண்பர் ஒருவரை அழைத்து வருகிறார். அவர் சில பொருட்களை வாங்கி கொண்டு வரும் போது மனோஜ் தன்னுடைய படிப்பை பற்றி பேசுகிறார். இதனால் அந்த ஸ்கூல் நண்பர் மனோஜை சிறப்பு விருந்தினராக அழைக்கிறார். மனோஜும் சரியென கூறிவிடுகிறார்.
ஸ்ருதி கோபமாக அவர் அம்மாவை போய் எதுக்கு ரவி ரெஸ்டாரெண்டுக்கு அடிக்க ஆள் அனுப்பின எனக் கேட்கிறார். அவர் அப்பாவிடமும் சொல்ல எதுக்கு மம்மி இப்படி ஆள் அனுப்பின எனக் கேட்க உன் வாழ்க்கையில் நல்லதுக்காக தான் இதை செஞ்சேன் எனக் கூற ஸ்ருதி கோபமாக திட்டிக்கொண்டே இருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


