அண்ணன்னு சொல்றாரு.. ஆனா கேப்டனை பார்க்க வரல!.. விஜயை பொளக்கும் பிரேமலதா!..
Vijay TVK: நேற்று வெற்றிகரமாக முடிந்தது தவெக கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கூடிய அந்த மாநாட்டில் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறியிருந்தார்கள். ஆனால் அதையும் மீறி சில பேர் கைக் குழந்தையோடு வந்ததை பார்க்க முடிந்தது. இரண்டு நாள்களுக்கு முன்பாகவே மக்கள் அந்த மாநாடு நடைபெறும் இடத்திற்கு கூடி விட்டார்கள்.
ஒரே திருவிழாக்கோலமாகத்தான் இருந்தது. விஜயின் பெற்றோர் மேடையில் அமரவைக்கப்பட்டனர். விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் மாநாட்டில் அவர்களுக்கு கீழ் வரிசையில் தான் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் நேற்று நடந்த மாநாட்டில் மேடையில் அமர வைக்கப்பட்டனர். அவர்களை பார்த்ததும் விஜய் கட்டியணைத்து அவரின் அன்பை பரிமாறினார். மாநாட்டில் அவர் பேசியதுதான் இப்போது டிரெண்டிங்காகி வருகின்றன.
குறிப்பாக விஜயகாந்தை அண்ணன் என்று சொன்னதும் மதுரை மக்களுக்கு பெரும் உற்சாகத்தை தந்தது. சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி அவர் எனக்கு அண்ணன் என கூறினார் விஜய். மதுரை மண்ணில் இறங்கியதும் அவர் நியாபகம் தான் வந்தது என்றும் கூறியிருந்தார். இதை பற்றி பிரேமலதா விஜயகாந்திடம் கேட்ட போது அவருக்கு அண்ணன் என்றால் எங்களுக்கு தம்பிதான்.
நாங்கள் எப்போதுமே சொல்வது என்னவெனில் விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளைதான் என பிரேமலதா கூறினார். ஆனால் விஜயகாந்த் இறந்த போது விஜயை பற்றி பிரேமலதா பேசிய ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. விஜய் இன்று சினிமாவில் மிகப்பெரிய இடத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு ஒரு முக்கிய காரணம் விஜயகாந்த். செந்தூரப்பாண்டி படத்தில் எத்தனையோ பெரிய நடிகர்களை கேட்டு நடிக்காத போது எஸ்.ஏ. சந்திரசேகருக்காக சம்பளம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் வந்து நடித்துக் கொடுத்தவர் விஜயகாந்த்.
அதுவும் அந்த நேரத்தில் விஜயகாந்த் மிகவும் பீக்கில் இருந்தார். அப்படி நடித்ததால்தான் அந்தப் படத்திற்கு பிறகு விஜயின் மார்கெட்டும் உயர தொடங்கியது. அப்படி இருந்த விஜய் விஜயகாந்த் உடம்பு சரியில்லாத போது ஒரு முறை கூட வந்து பார்க்கவில்லை. அது எங்களுக்கும் வருத்தம். எங்களுடைய தொண்டர்களுக்கும் வருத்தம். அப்போ வராத விஜய் கேப்டன் இறந்த பிறகு ஏன் வந்தார் என தெரியவில்லை. இதை விஜயிடம் ஒரு முறை பார்க்கும் போது கண்டிப்பாக கேட்பேன் என பிரேமலதா கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


