Coolie Movie: ‘கூலி’ படத்துல இதான் என் வேலை.. அமீர்கானை இப்படி புலம்ப வச்சிட்டீங்களே

Coolie Movie: கூலி படத்தின் வசூல் மெல்ல மெல்ல குறைய தொடங்கியிருக்கிறது. 1000 கோடி கனவை நிச்சயமாக கூலி படம் அடையாது என்பது ஓரளவு தெரிந்துவிட்டது. அதற்கு காரணம் கடந்த இரண்டு நாள்களில் இதன் வசூல் மிகவும் குறைவு. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் கூலி. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

அனிருத் இசையில் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பொதுவாக ரஜினியின் படங்களில் பிஜிஎம் பட்டையை கிளப்பும். அதுவும் அனிருத் இசையமைக்க ஆரம்பித்த பிறகு ரஜினிக்கு வேலையே இல்லை என்பது போல் நிலைமை மாறிவிட்டது. முழுவதும் பிஜிஎம்மிலேயே படத்தை சூப்பர் ஹிட்டாக்கி விடுவார் அனிருத். அப்படித்தான் இந்தப் படத்திலும் நடந்திருக்கிறது.

குறிப்பாக மோனிகா பாடல் டாப் நாச். படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, அமீர்கான், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். விக்ரம் படம் மாதிரி ரஜினிக்கும் கூலி படம் பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்த்த நிலையில் ஓரளவுதான் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வசூலும் நினைத்த அளவு இல்லை.

அதற்கு காரணம் படத்திற்கு சென்சார் போர்டு கொடுத்த ஏ சான்றிதழ்தான். யுஏ சான்றிதழ் மட்டும் கிடைத்திருந்தால் குழந்தைகளுடன் பெற்றோர்களும் சேர்ந்து படத்தை பார்க்க வந்திருப்பார்கள்.ஆனால் குழந்தைகள் இல்லாமல் பெற்றோர்களும் படத்தை பார்க்க முடியாத சூழ்நிலை. அதுதான் படத்தின் வசூல் குறைய காரணமாகவும் அமைந்தது. இந்த நிலையில் படத்தில் அமீர்கான் கேரக்டரை எதிர்பார்த்து ரசிகர்கள் இருந்தார்கள்.

எப்படி விக்ரம் படத்தில் சூர்யாவுக்கு 10 நிமிட காட்சி என்றாலும் படம் முடிந்து பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் சூர்யா. அப்படியாக அமீர்கானின் கேரக்டரும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்திற்கு ஏன் அமீர்கான் என்று கேட்கும் அளவுக்குத்தான் அவருடைய கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருந்தது. படத்தில் ரஜினிக்கு பீடி பற்ற வைப்பதுதான் என்னுடைய வேலை. அதை பற்றி எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் ரஜினியின் தீவிர ரசிகன். அந்த ஒரு பெருமை போதும் என தன்னுடைய கேரக்டரை பற்றி ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் அமீர்கான்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.