உங்க நிலைமை என்னாகுமோ!.. இயக்குனரை அசிங்கப்படுத்திய விக்ரம் மனைவி!…
Chiyan Viram: இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் ராஜகுமாரன். அப்போது முன்னணி நடிகையாக இருந்த தேவயானி நடித்த ‘நீ வருவாய் என’ என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் பார்த்திபன், அஜித் இருவரும் நடித்திருந்தனர். அதேபோல் சேது படத்திற்கு பின் விக்ரம் நடித்த ‘விண்ணுக்கும் மண்ணுக்கும்’ படத்தையும் இவர்தான் இயக்கியிருந்தார்.
இந்த படத்தில் நடிகையாக இருக்கும் தேவயானியை விக்ரம் காதலிப்பது போலவும் அவருக்கு அவரின் அண்ணன் சரத்குமார் உதவுவது போலவும் கதை அமைத்திருந்தார் ராஜகுமாரன். தேவயானியிடம் தான் என்னவெல்லாம் சொல்ல விரும்பினாரோ அதை விக்ரம் சொல்வது போல வசனம் எழுதினார் ராஜகுமாரன். இதில் மயங்கிய தேவயானி ராஜகுமாரனை திருமணம் செய்ய முடிவெடுத்தார்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி வீட்டின் சுவர் ஏறி குதித்து இரவோடு இரவாக ஓடிப்போய் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார் தேவயானி. இது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இதனால் ஆர்.பி.சவுத்ரி உள்ளிட்ட பல தயாரிப்பாளர்களுக்கும் ராஜகுமாரனின் மீது கோபம் ஏற்பட்டது.
எனவே அவரை வைத்து படம் தயாரிக்க யாரும் முன் வரவில்லை. எனவே ராஜகுமாரனே சொந்த காசை போட்டு சில படங்களை எடுத்தார். அதில் தேவயானி கதாநாயகியாக நடித்தார். ஒரு படத்தில் ராஜகுமாரனே ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதுவும் ஓடவில்லை. அதன்பின் இப்போது வரை ராஜகுமாரன் படம் இயக்கவில்லை.

இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய ராஜகுமாரன் ‘சேது படத்திற்கு பின் 80 கதைகளை கேட்டு விக்ரம் நடிக்க ஒப்புக்கொண்ட படம் விண்ணுக்கும் மண்ணுக்கும். ஆனால் அந்த படம் சரியாக போகவில்லை.. படம் ரிலீஸ் ஆகி இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவருக்கு போன் செய்தேன். அப்போது போனை வாங்கி பேசிய விக்ரமின் மனைவி ‘சேது படமே அவருக்கு 5 வருஷம் தாங்கும்.. ஆனா நீங்கதான் பாவம். என்ன பண்ண போறீங்களோ’ எனக் கேட்டார் இப்போதும் அந்த கசப்பு என் மனதில் இருக்கிறது’ என ஃபீல் பண்ணி பேசி இருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


