Vijay Manaadu: பயமா உங்களுக்கு? தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்.. காத்துக்கிடக்கும் தொண்டர்கள்
Vijay Manaadu: இன்று மாலை மதுரையில் பெரிய சரித்திரத்தை படைக்க இருக்கிறார் விஜய். விக்கிரவாண்டியில் நடந்தது சம்பவம். மதுரையில் நடக்கப் போவது சரித்திரம் என ஆங்காங்கே பேனர்களை ஒட்டி தவெக தொண்டர்கள் ஆர்ப்பறித்து வருகின்றனர். நேற்று இரவே விஜய் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்து விட்டார். காலையில் அவருடைய பெற்றோர்கள் வந்து விட்டனர்.
கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் கூடும் மாநாடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் தற்போது மேடையில் அமர தொடங்கி விட்டார்கள். இன்னும் சற்று நேரத்தில் மாநாடு தொடங்க இருப்பதால் தொண்டர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். அதற்கு முன்னதாக மாலை 3 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது. தற்போது விஜய் தன்னுடைய மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறார்.
விக்கிரவாண்டியில் பேசிய போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விஜய் பேசியிருந்தார். இது மற்ற அரசியல் கட்சியில் அழுத்தம் கொடுப்பதாக இருந்தது. அதனால் மதுரையில் விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை கேட்க அவருடைய தொண்டர்கள் மட்டுமில்லாமல் மற்ற அரசியல் தலைவர்களிடமும் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
அதில் திருச்செந்தூரில் இருந்து காலை 7 மணிக்கெல்லாம் புறப்பட்ட தொண்டர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி பாஸ் காண்பித்தால்தான் அனுமதிப்போம் என சொல்லி கிட்டத்தட்ட 12 மணி வரை அவர்களை விடாமல் தடுத்து நிறுத்தியிருப்பதாக தொண்டர் ஒருவர் வேதனையுடன் கூறியிருக்கிறார். இதை எதிர்த்து எங்களால் எதுவும் பண்ண முடியும். ஆனால் வேண்டாமே. பிரச்சினை எதற்கு என நினைத்துதான் நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்.

இன்னும் எத்தனை மணி நேரம் ஆனாலும் நாங்கள் காத்திருக்க தயார். இருந்தாலும் ஆளுங்கட்சியாக இருந்தால் இப்படியெல்லாம் செய்வீர்களா? என்று ஒரு வீடியோவை அந்த தொண்டர் பகிர்ந்திருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


