அந்த கண்டிஷன்னால.. ரஜினி என் படத்துல நடிக்கலன்னு சொல்லிட்டாரு!.. வருத்தத்துடன் பகிர்ந்த டி.ராஜேந்தர்

தமிழ் சினிமாவில் தனி ஒரு அடையாளமாக விளங்கியவர் டி.ராஜேந்திரன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, பாடல்கள், இசை, எடிட்டிங் என தன்னுடைய படங்களில் அனைத்துமே செய்து அசத்தக்கூடியவர். அதனால் இன்று பல இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறார். டி.ராஜேந்திரன் படங்களுக்கு எப்போதும் ஒரு மவுசு உண்டு. குறிப்பாக பெண்கள் மத்தியில் டி.ஆர் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

தற்போது உள்ள காலகட்டத்தில் ரீ-ரிலீஸ் படங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் டி.ராஜேந்திரன் தனது ”உயிருள்ளவரை உஷா” திரைப்படத்தை செப்டம்பர் மாதம் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளார். இதற்கான பிரஸ் மீட்டிங் கலந்து கொண்டு பேசிய அவர்,” என்னுடைய டி.ஆர் டாக்கிஸ் என்ற ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கி இருக்கின்றேன். திரையரங்குகளில் என்னுடைய படங்களை இந்த நிறுவனத்தின் மூலம் வெளியிட தயாராக இருக்கின்றேன். என் மனைவியின் தஞ்சை சினி ஆர்ட்ஸ் மூலம் உயிருள்ளவரை உஷா திரைப்படத்தை டி.ஆர் டாக்கீஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ரீ-ரிலீஸ் செய்ய இருக்கிறேன்”.

#image_title

’நான் அடிப்படையில் ரஜினி-கமல் வெறியன். என் படத்திற்கு வசனம் எழுதும் பொழுது அவர்கள் சொன்னால் எப்படி இருக்கும் என்று நினைத்து தான் எழுதுவேன். என்னுடைய ”ரயில் பயணங்கள்” படத்தை பார்த்துவிட்டு பாலச்சந்தர் சார் பாராட்டினார். அதன் பிறகு ரஜினி சார் என்னை பாராட்டி உங்க வசனத்தில் பேசி நான் நடிக்க வேண்டும். ஒரு கதை தயார் செய்யுங்கள் என்று சொன்னார். அவருக்காக தயார் செய்யப்பட்ட கதை தான் இந்த உயிருள்ள வரை உஷா படத்தில் வரும் ’செயின் ஜெயபால்’ கதாபாத்திரம்”.

”இதை ரஜினி சாரிடம் சொன்னவுடன் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார். என்னை கட்டிப்பிடித்து இந்த படம் நாம கண்டிப்பா பண்றோம் அப்படின்னு சொன்னார். ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தை கூட்டிட்டு வாருங்கள் நான் உங்களுக்கு தேதி கொடுக்கிறேன் என்று சொன்னார். அதற்கு நான் இது என் சொந்த படமாக எடுக்கப் போகிறேன். இதற்கு முன் என்னுடைய படங்கள் தோல்வியடைந்து எனக்கு நஷ்டத்தை கொடுத்தது. அந்தத் தொகையை ஈடுகட்ட வேண்டுமேயானால் நான் சொந்த படம் எடுத்து அதில் லாபம் பார்த்தால் தான் முடியும் என்று அவரிடம் சொன்னேன்”.

#image_title

” சிறிய கம்பெனி படங்களில் நடிப்பதில்லை என்று ரஜினி உறுதியாக இருந்தார். அப்பொழுது நான் இந்த தஞ்சை சினி ஆர்ட்ஸ் கம்பெனியை நீங்கள் எதிர்பார்க்கும் லவலுக்கு உருவாக்கி விட்டு அதன் பிறகு உங்களுடன் பணியாற்றுகிறேன் என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். அதனால் ரஜினி சார் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. தயாரிப்பாளர் பிரச்சினையால்தான் ரஜினி சார் என் படத்துல நடிக்க முடியாமல் போனதே தவிர வேறு எந்த காரணமும் இல்லை”. என்று கூறினார். ரஜினி, டி.ராஜேந்திரன் படங்களில் நடித்ததில்லை என்றாலும் சமீபத்தில் வெளியான கூலி திரைப்படத்தில் ரஜினிக்காக ஒரு பாடலை பாடியிருப்பார் டி.ராஜேந்திரன்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.