300 கோடி வசூல் பண்ணியும் வீணாப்போச்சே!.. விலை போகாத மதராஸி.. பாவம் எஸ்.கே..
Madharasi: அமரன் திரைப்படத்தின் வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மதிப்பை உயர்த்தி இருக்கிறது. ஏனெனில் அந்த படம் 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படம் இதுதான். இந்தப் படத்தால் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை 70 கோடியாக உயர்த்தி விட்டார்.
சிவகார்த்திகேயனின் கையில் இப்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வரும் பராசக்தி ஆகிய இரண்டு படங்கள் இருக்கிறது. இதில் மதராஸி படம் முடிந்து வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. ஆனால் இதுவரை படத்தின் புரமோஷன் வேலையை படக்குழு துவங்கவே இல்லை. சமீபத்தில் ஊடகம் ஒன்றிய ஒன்றில் பேசிய ஏ.ஆர்.முருகதாஸ் ‘பெரிய அளவில் புரமோஷன் செய்து ஹைப் ஏற்ற வேண்டாம் என முடிவு செய்திருக்கிறோம்’ என சொன்னார்.

ஒருபக்கம் மதராஸி படத்தின் வியாபாரமும் இன்னும் துவங்கப்படவில்லை. படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உரிமைகளை இதுவரை எந்த விநியோகஸ்தரும் வாங்கவில்லை. அதற்கு காரணம் அமரன் படம் 300 கோடி வசூல் செய்து விட்டதால் மதராஸி பட தயாரிப்பாளர் அதிக விலையை சொல்கிறாராம். ஆனால் ‘எல்லா படமும் அமரன் போல வசூல் செய்யாது.. நீங்கள் சொல்லும் விலை கட்டுப்படி ஆகாது’ என விநியோகஸ்தர்கள் சொல்லியும் தயாரிப்பாளர் இறங்கி வரவில்லை. எனவேதான் அந்த படத்தின் உரிமைகள் இன்னும் விற்கப்படாமல் இருக்கிறது.
அநேகமாக தயாரிப்பாளர் இறங்கி வர மாட்டார் என்பதால் கடைசி நேரத்தில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் இப்படத்தை கொடுப்பார்கள் எனத் தெரிகிறது. அதாவது தமிழ்நாட்டில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் மதராஸி படத்தை ரிலீஸ் செய்யும். கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் தயாரிப்பாளரே நேரடியாக ரிலீஸ் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


