பைசனோடு மோதும் அந்த ஹீரோ!.. இந்த வருஷ தீபாவளி ஒன்னும் இல்லாம போச்சே!..

Diwali Release: பொதுவாக தீபாவளி, பொங்கல் என்றாலே பெரிய நடிகர்களின் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகும். எனவே ரசிகர்களுக்கு அதுவே கொண்டாட்டமாகவும் திருவிழாவாகவும் இருக்கும். 80,90களில் ரஜினி, கமல், பிரபு, மோகன், ராமராஜன் போன்ற பல நடிகர்களின் படங்கள் தீபாவளி, பொங்கலுக்கு வெளியாகி வந்தது. அப்போதெல்லாம் தமிழகத்தில் நிறைய தியேட்டர்கள் இருந்ததால் எல்லோரின் படங்களும் வெளியாகி நிறைய நாட்கள் ஓடும்.

ஆனால் தற்போது தியேட்டர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல.. உருவாகும் திரைப்படங்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. அதோடு ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறது என்றால் மற்ற படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கப்படுகிறது. அதற்கு காரணம் தங்களுக்கு போதுமான தியேட்டர்கள் கிடைக்காது. இதனால் வசூல் பாதிக்கும் என்பதுதான்.

#image_title

கடந்த பல வருடங்களாகவே ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் தீபாவளி பொங்கலுக்கு வெளியாவது இல்லை. எப்போதாவதுதான் அது நடக்கிறது. இந்த வருட தீபாவளிக்கும் பெரிய நடிகர்களின் படம் எதுவும் வெளியாகவில்லை. சூர்யாவின் கருப்பு, கார்த்தியின் சர்தார் 2 ஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸை குறி வைத்திருந்தது. ஆனால் அந்த படங்களின் ஓடிடி உரிமை இதுவரை விற்கப்படவில்லை. எனவே அந்த படங்கள் அடுத்த வருடமே வெளியாகும் என சொல்லப்படுகிறது.

அதேநேரம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இதை அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். மேலும் பிரதீப் ரங்கநாதனின் ட்யூட்(Dude) திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருந்தது ஆனால் அந்தப் படத்தின் ஓடிடியும் விற்கப்படாததால் ரிலீஸ் தேதி தள்ளிப் போகிறது.

#image_title

ஒருபக்கம் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் டீசல் திரைப்படம் உருவாகி இரண்டு வருடங்களாகிவிட்டது. ஆனால் சில காரணங்களால் அப்படம் இன்னமும் வெளியாகவில்லை. அநேகமாக டீசல் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என்கிறார்கள். அதற்கான முயற்சியில் அப்படத்தின் தயாரிப்பாளர் இறங்கி இருக்கிறார்.

எனவே இந்த தீபாவளிக்கு விக்ரம் துருவின் பைசன் மற்றும் ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாததால் கண்டிப்பாக இந்த வருட தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமையாது என்று சொல்லலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.