லோகேஷ் போனா போகட்டும்!.. அந்த இயக்குனருடன் கை கோர்க்கும் கார்த்தி….

Actor Karthi: பருத்திவீரன் என்கிற ஒரே திரைப்படம் மூலம் ரசிகர்களிடமும் பிரபலமான நடிகர் கார்த்தி தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்து முன்னனி நடிகர்களில் ஒருவராக மாறினார்.
பன்ச் டயலாக் பேசுவது, பல பேரை அடித்து பறக்க விடுவது, மாஸ் காட்சிகளில் நடிப்பது போன்ற எந்த பில்டப்புகளையும் செய்யாமல் தனக்கு ஏற்ற நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடத்தி வரும் நடிகர்தான் கார்த்தி.

அதனால்தான் மெய்யழகன் போன்ற படங்களில் அவரால் நடிக்க முடிகிறது.
கார்த்தியின் கையில் தற்போது நிறைய படங்கள் இருக்கிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் வாத்தியாரே என்கிற படத்தில் நடித்தார். ஆனால் கார்த்தி பல நாட்கள் கால்சீட் கொடுத்தும் அந்த படம் இன்னமும் முடியவில்லை. எனவே அது அப்படியே நிற்கிறது. அடுத்து பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார் கார்த்தி.

இந்த படத்தை இந்த வருட தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுருந்தனர். ஆனால் இப்படத்தின் ஓடிடி உரிமை இன்னமும் விற்கப்படவில்லை. எனவே அடுத்த வருடமே ரிலீஸ் என்கிறார்கள். சர்தார் 2 படத்தை முடித்துவிட்டு தற்போது கார்த்தி டானாகாரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கி வரும் மார்சல் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இது ஒரு பீரியட் படம்.

இந்த படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் கார்த்தி. ஆனால் லோகேஷோ ரஜினி, கமலை வைத்து ஒரு புதிய படத்தை துவங்கவிருக்கிறார். எனவே லோகேஷ் அந்த படத்தை முடிப்பதற்குள் கார்த்தி சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். அதற்கான வேலைகள் இப்போது துவங்கியிருக்கிறது. தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வரும் சுந்தர்.சி அந்த படத்தை முடித்துவிட்டு கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.