Coolie 7th day Collection: கூலி படத்தின் ஒரு வார வசூல்… வர வர மாமியார்… கதையாகி வருகிறதே?

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் கடந்த 14ம் தேதி கூலி வெளியானது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், அமீர்கான், சத்யராஜ், சௌபின் சாகிர், நாகர்ஜூனா, உபேந்திரா, சுருதிஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். பாடல்கள் அட்டகாசம். பின்னணி இசையும் படத்தைத் தூக்கி நிறுத்துகின்றன.

படத்திற்கு ஆரம்பத்தில் நெகடிவ் விமர்சனங்கள் வந்த போதும் வசூல் மழையில் நனைந்தது. இது பலருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது. எல்லாவற்றுக்கும் காரணம் ரஜினி என்ற ஒன்மேன் ஆர்மி தான். படத்தை அவருக்காகவே பார்க்க வந்த கூட்டம் ஏராளம். வழக்கம்போல ரசிகர்களுக்கு விருந்து படைத்து விட்டார் என்றே சொல்லலாம்.

படத்தில் சௌபின் சாகிரின் நடிப்பு எல்லோராலும் ரசிக்கப்பட்டது. ரஜினி ஹீரோவா? இவர் ஹீரோவா? என்றே விமர்சனங்கள் வந்தன. படத்தில் ரஜினிக்கு ஈக்குவலாக அனைத்துக் காட்சிகளிலும் வந்து அசத்துகிறார். அற்புதமான நடிப்பு. இனி தொடர்ந்து அவரை தமிழ்ப்படங்களில் காணலாம். அதே போல சத்யராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியுடன் நடித்துள்ளது ஆச்சரியத்தைத் தருகிறது.

சுருதிஹாசன் முதல் முறையாக ரஜினி படத்தில் நடித்துள்ளார். இப்படி பல ஹைப்கள் படத்தில் இருப்பதால் ரசிகர்கள் படத்தை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். அனிருத்தின் இசையில் துடிப்புமிக்க பாடலை படத்தில் பார்த்து விட வேண்டும் என்று ஒரு ஆர்வம். அதிலும் மோனிகா பாடல் இன்று டிரெண்டிங்காகி வருகிறது.

#image_title

படம் நாலு நாளில் 450 கோடியை உலகளவில் வசூலித்து விட்டது. இந்திய அளவில் ஒருவாரமாக வசூலித்த விவரம் இதுதான்.

முதல் நாளில் 65 கோடி, 2வது நாளில் 54.75 கோடி, 3வது நாளில் 39.5 கோடி, 4வது நாளில் 35.25கோடி, 5வது நாளில் 12 கோடி, 6வது நாளில் 9.5கோடி, 7வது நாளில் 6.50கோடி என மொத்தம் 222.5கோடியை வசூலித்துள்ளது.

முதல் நான்கு நாள்களில் வசூலில் கொடிகட்டிப் பறந்தது கூலி. அடுத்தடுத்த நாள்களில் கணிசமாகக் குறைந்துள்ளது. ஆனாலும் படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைத்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.