Siragadikka aasai: அருணின் குறுக்கு புத்தியால் கடுப்பாகும் முத்து… ரோகிணிக்கு அதிகரிக்கும் சிக்கல்!
Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மீனா வீட்டுக்கு வந்து எல்லாரிடமும் கிரிஷ் பாட்டி பேசியதை குறித்து சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதை கேட்டு ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். மீனா, கிரிஷ் பாட்டி என் பொண்ணுக்கிட்ட தான் விட்டு போனேனு சொன்னாங்க. அப்போ எதுக்கு நம்ம வீட்டில் விட்டாங்க என ரவியும் கேட்கிறார்.
அவங்க பாட்டி சொன்ன மாதிரி கிரிஷ் அம்மா வெளிநாடு போகலை. அவங்க சொன்ன எல்லாமே பொய். வேற என்னவோ மர்மம் இருக்கு எனக் கூற எல்லாருக்குமே பிரச்னை என பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
ரோகிணி அதிர்ச்சியாக மனோஜ் அந்த பையன் இருந்தப்பையும் பிரச்னை. இப்பயும் பிரச்னையா என்கிறார். அந்த பையன் போயிட்டான். இப்போ என்ன அவன் அம்மா யாரு என்ன எனப் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
சரியென எல்லாரும் கிளம்பி விட முத்து மற்றும் மீனா கிரிஷ் பாட்டி சொன்னது எல்லாமே பொய்தான். அவங்க கண்டிப்பா நம்ம கையில் மாட்டுவாங்க. பொய் சொல்றது பலூனில் காத்து அடிக்கிற மாதிரி எப்ப வேணாலும் வெடிச்சிடும் என்கிறார். இதை கேட்டு ரோகிணி அதிர்ச்சியுடன் வாசலில் கேட்டு கொண்டு இருக்கிறார்.

வீட்டிற்கு வரும் அருண், சீதாவிடம் செல்வம் வந்து தன்னிடம் ஓவராக பேசியதாகவும் லஞ்சம் கொடுக்க டிரை செஞ்சதாகவும் சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் நாங்க முத்து பிரண்ட்ஸ், எங்க கிட்டையே ஓவரா பேசாதே. நீ முத்துக்கு பயந்த எனவும் மாற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்.
ஏற்கனவே எனக்கும் உங்க மாமாக்கும் மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு. இப்போ இவங்க செய்றதுல இன்னும் பிரச்னை ஆகும் எனக் கூற சீதா நீங்க உங்க வேலையில சரியா இருக்கீங்க. நீங்க யாருக்காகவும் கவலைப்படாதீங்க எனக் கூறிவிடுகிறார் சீதா.
ஷெட்டில் செல்வம் கவலையாக உட்கார்ந்து அருண் செஞ்சதை சொல்லிக்கொண்டு இருக்கிறார். முத்து வந்தவுடன் அவரிடம் சொல்லலாம் எனக் கூற செல்வம் தடுத்து விடுகிறார். அவர் வந்து செல்வத்திடம் என்ன விஷயம் எனக் கேட்க அதெல்லாம் இல்லை என அவர் சமாளித்து விடுகிறார்.
பின்னர் செல்வத்துடன் இருந்த நண்பர்கள் முத்துவிடம் விஷயத்தை சொல்லி விடுகின்றனர். செல்வம் தடுக்க முத்து அவர் பேச்சை கேட்காமல் அங்கிருந்து கிளம்பி கோபமாக சீதாவிடம் சென்று பேச போகிறார். சீதாவை ஹாஸ்பிட்டலில் பார்க்கும் முத்து, நான் ஏற்கனவே நிறைய கோபத்தில் இருந்தேன். ஆனால் உங்க கல்யாணத்துக்கு பிறகு எதையுமே யோசிக்கலை.
உன்னை, அத்தையை, சீதாவை என் குடும்பமா தான் நினைச்சிட்டு இருக்கேன். அவன் ஹெல்மெட் போடலைனா சட்டத்தின்படி எதுவும் நடவடிக்கை எடுக்க சொல்லு. அதை விட்டுட்டு அப்பாவி மனுஷங்க மேல கை வைக்கிறது சரியா இல்லை. எனக்கு ஒரு பிரச்னை வந்தா அவன் தான் முன்னாடி வரான். அவனுக்கு ஒன்னுனா நான் சும்மா இருக்க மாட்டேன் எனவும் கூறிவிடுகிறார்.
ரோகிணிக்கு மகேஸ்வரி கால் செய்து போர்டிங் ஸ்கூலில் இருந்து கால் வந்ததாகவும் கிரிஷ் ரொம்ப அடம் பண்ணுவதாகவும் சொல்ல ரோகிணி போனில் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால் கிரிஷ் தொடர்ந்து அடம் பிடிக்க பாட்டி காணாமல் போன மாதிரி நானும் போய் விடுவேன் எனக் கூறி கிரிஷ் அமைதியாகி விடுகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

