TVK Conference: கொடிக்கம்பத்தை நள்ளிரவே வந்து பார்த்த விஜய்! அரணாக இருந்த தொண்டர்கள்
TVK conference: இரண்டாவது மாநில மாநாடாக இன்று விஜய் தன்னுடைய கட்சி மாநாட்டை மதுரையில் நடத்துகிறார். ஏற்கனவே விக்கிரவாண்டியில் நடத்திய முதல் மாநாடு பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. வழக்கம் போல ஆங்காங்கே இருக்கும் தொண்டர்கள் ரசிகர்கள் என பல ஊர்களில் இருந்து மாநாட்டை பார்ப்பதற்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். அதில் ஒரு தம்பதி பெங்களூரில் இருந்து பைக்கில் வந்ததாக சொல்லி இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் துபாயிலிருந்தும் இந்த மாநாட்டை பார்ப்பதற்கு ரசிகர்கள் வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு மாநாடு சம்பந்தமாக நடந்த சில விஷயங்கள் தொண்டர்கள், எப்படி இந்த மாநாட்டிற்காக உழைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் பற்றி அவருடைய கருத்துக்களை கூறியிருக்கிறார். தூத்துக்குடி, ராம்நாடு, பரமக்குடி, கமுதி என அருகில் இருக்கும் ஊர்களில் இருந்து பல ரசிகர்களும் தொண்டர்களும் வந்த வண்ணம் இருக்கின்றனர். வட மாவட்டத்திலிருந்து நேற்று கிளம்பி வந்து விட்டார்கள். இன்று விஜய்யோட பேச்சு என்னவாக இருக்கும் என அந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கிறது.
அதோடு நேற்று விஜய் நள்ளிரவில் வந்து பரபரப்பாக கொடி கம்பம் விழுந்த இடத்தை பார்த்து இருக்கிறார். என்ன அங்கு நடந்தது என்ன மாதிரியான விஷயங்கள் நடந்தது என கொஞ்சம் டென்ஷன் ஆகவே இருந்தாராம். விஜயை பொறுத்த வரைக்கும் எந்த சலசலப்பும் எந்த இடையூறும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஒரு விஷயத்தை பண்ண வேண்டும் என சினிமாவிலிருந்து அவர் அதை கடைபிடித்து வருகிறார். ஏனெனில் கொடி கம்பம் விழுந்தது என்ற தகவல் தெரிந்ததில் இருந்தே அவர் தூக்கம் இல்லாமல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த விபத்தால் சேதமடைந்த காருக்கு ஆக வேண்டிய எல்லா செலவுகளையும் பார்த்துக் கொள்வதாகவும் கட்சியிலிருந்து சொல்லி இருக்கிறார்களாம் .இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் அந்த மாநாட்டை சுற்றி அந்த தீவு திடலுக்கு ஒரு அரணாக நேற்று இரவு முழுக்க தொண்டர்கள் விடிய விடிய முழித்துக் கொண்டு காத்திருந்தார்களாம். ஏனெனில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்கக்கூடாது என்பதற்காகவே தொண்டர்கள் காவலாக இருந்ததாக சொல்லப்படுகிறது. இன்று யாரேனும் விஐபிகள் வருகிறார்களா என்பதை எல்லாம் பற்றி ரகசியமாகவும் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தொண்டர்கள் ரசிகர்கள் எந்த அளவுக்கு வருவார்கள் என்ற ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது .ஊடகங்கள் எழுதியது ஒரு லட்சம் பேர் .ஆனால் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வந்து விட்டார்கள் என்று தெரிகிறது. 87 ஏக்கர் நிலப்பரப்பு. தவெக தரப்பிலிருந்து 2000 பவுன்சர்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. போலீஸ் தரப்பில் இருந்து தென்மண்டல ஐஜி 3600 போலீசார் பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். சிசிடிவி கேமராக்கள் அதுவும் டிரோன்ஸ் மூலமாக என்னென்ன நடக்கிறது என்பதை காவல்துறை கட்டுப்பாட்டிற்கு அனுப்பும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த மாநாட்டில் என்னென்ன அசம்பாவிதங்கள் நடந்ததோ அது எதுவுமே இந்த மாநாட்டில் நடக்காத வகையில் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிகிறது.
குறிப்பாக உணவு தண்ணீர் தங்கு தடை இன்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. நூற்றுக்கணக்கான மொபைல் கழிப்பறைகள் தண்ணீர் வசதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதாம். ஏற்கனவே ஒரு வைரத்தை இழந்து விட்டோம். இனி ஒரு தங்கத்தை இழக்க மாட்டோம் என விஜயகாந்தின் கோட்டையாக இருக்கும் மதுரை ரசிகர்கள் விஜய்க்காக கூறி வருவதையும் பார்க்க முடிகிறது. அதற்கு ஏற்ற வகையில் வாராரு வாராரு அழகர் வாராரு போன்ற விஜயகாந்த் சம்பந்தமான சில பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது .
இதை மேடையில் ஒலிப்பதற்கு விஜய் அனுமதிப்பாரா என்றும் தெரியவில்லை .ஆனால் இந்த மாநாட்டோடு அவர் மீண்டும் வீட்டிற்குள் சென்று அடங்கி விடக்கூடாது. இந்த மாநாட்டிற்கு பிறகு ஆவது ஒவ்வொரு தெரு மூளைக்கும் அவர் வரவேண்டும். ஒவ்வொரு ஊராக அலைய வேண்டும். அப்படி வந்தால் தான் அவருடைய இலக்கை அடைய முடியும். நிச்சயமாக விஜய் ஒரு நடை பயணத்தை செப்டம்பர் மாதம் தொடங்கப் போகிறார். அந்த நடை பயணம் விஜய்க்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். அந்த நடை பயணம் வெறும் கண்துடைப்பாக இருந்தால் அது எடுபடாது. ஒவ்வொரு சாமானிய மனிதர் வீட்டின் முன் நின்று ஐயா ஒரு செம்பு தண்ணி கொடுங்க, அம்மா ஒரு கிண்ணம் கஞ்சி குடுங்க என விஜய் வாங்கி குடித்து விட்டால் அப்படி ஒரு அரசியல் மட்டும் செய்துவிட்டால் மக்களுடைய மனநிலை அப்படியே மாறிவிடும் .
சினிமாவில் பெரிய ஆளு. இவரெல்லாம் நம்ம வீட்டுக்கு வருவாரா என நினைத்திருந்தவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு இறங்கி வந்துவிட்டால் அவருக்குத்தான் வெற்றி. இதுதான் எம்ஜிஆரின் பார்முலாவும் கூட .எம்ஜிஆர் அண்ணா பேனரை வைத்தால் மட்டும் போதாது. எம்ஜிஆர் அரசியலை அப்பட்டமாக இந்த மாநாட்டுக்கு பின் பாலோ செய்து விட்டால் 2026 இல் ஒரு அசைக்க முடியாத தலைவராக வருவார் விஜய் என செய்யாறு பாலு இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

