TVK Maanadu: தெறிக்கவிடும் தவெகவின் இரண்டாவது மாநாடு… விஜயிற்காக தல ரசிகர்கள் செய்த சம்பவம்!
TVK Maanadu: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரையில் இன்று நடைபெற இருக்கும் நிலையில், ஆரம்ப கட்ட விஷயங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தல ரசிகர்கள் செய்யும் சில விஷயங்கள் கசிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். திடீரென தன்னுடைய அரசியல் கட்சியை அறிவித்தார். எதையும் தடாலடியாக செய்யாமல் பொறுமையாக தன்னுடைய பணிகளை தொடங்கினார். கட்சி பெயரில் இருந்து கட்சி கொடி வரை ஒவ்வொன்றாக வெளியிட்டு தன் கட்சிக்கான புகழை தேடிக்கொண்டார்.
கட்சியின் ஆட்சேர்ப்பு பணிகளும் பரபரப்பாக நடந்து வருகிறது. கடந்தாண்டு விக்ரவாண்டியில் தவெகவின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடந்தது. இதை பார்த்த பல கட்சிகள் அதிர்ச்சி அடைந்தனர். பல லட்சம் தொண்டர்கள் மாநில மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தவெகவின் இரண்டாவது மாநாடு மதுரையில் இன்று நடக்க இருக்கிறது. பிரம்மாண்டமாக இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கும் இங்கு நடந்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பில் இருந்து மாநாடு நடக்கும் இடத்தை சுற்றுலா இடம் போல மக்கள் வந்து பார்வையிட்டு சென்றதையும் பார்க்க முடிந்தது.
இன்று மாநாடு நடக்க இருக்கிறது. மற்ற கட்சிகளை போல இல்லாமல் இதில் கலந்து கொள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளை அழைத்து வர வேண்டாம் என கட்சி தலைவரான விஜய் ஏற்கனவே அறிவித்துவிட்டார். இருந்தும் இரண்டு நாளைக்கு முன்பில் இருந்து மக்கள் கூட்டம் மாநாட்டு திடலுக்கு படை எடுத்து வருகிறது.

அதிலும் இன்று காலையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திடலில் தொடர்ந்து சேர்ந்து இருக்கின்றனர். தொண்டர்களின் நலன் காக்க விஜய் மாநாட்டை சீக்கிரமாக தொடங்கி இரவு 7 மணிக்கு முன் முடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே திடலில் மக்களின் பாதுகாப்பிற்காக 50க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கிறது. தற்போது இது மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளும் மக்களுக்காக வென்டிலேட்டர்கள் பொருத்தப்பட்ட உயர்ரக 10 ஆம்புலன்ஸ்களை நிறுத்தி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அஜித் ரசிகர்களும் மாநாட்டு பணிகளில் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த விக்கிரவாண்டி மாநாட்டில் கூட 40க்கும் அதிகமான ஆம்புலன்ஸ்களை ரசிகர்கள் கொண்டு வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

