அட்லி – அல்லு அர்ஜுன் படத்தில் கேமியா வேடத்தில் அந்த நடிகர்!.. சும்மா களைகட்டுமே!..
AA26: தமிழ் சினிமாவில் அதிக பட்ஜெட்டுகளில் படம் எடுப்பதில் முக்கியமான இயக்குனராக இருப்பவர் அட்லி. விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்
. தமிழில் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்து ஹிட் அடித்த பழைய திரைப்படங்களின் கதையை கொஞ்சம் உல்டா செய்து படம் எடுப்பவர் என்கிற விமர்சனம் இவர் மீது உண்டு. ஆனால் அதற்கெல்லாம் இவர் பதில் சொல்வதில்லை.
விஜயை வைத்து மூன்று திரைப்படங்களை இயக்கியதால் பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான் அழைத்து தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். அப்படி உருவான ஜவான் திரைப்படம் உலக அளவில் 1300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. எனவே இந்திய அளவில் முக்கியமான இயக்குனராக மாறி இருக்கிறார் அட்லி. பல பெரிய நடிகர்களின் பார்வையும் இவர் மீது திரும்பி இருக்கிறது.

அதனால்தான் புஷ்பா பட ஹீரோ அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பேன் இந்தியா படமாக உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 700 கோடி பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறது.
இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் மூன்று வருடங்களில் நடிக்கப் போவதாகவும் தீபிகா படுகோனே, யோகி பாபு, கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடிப்பதாகவும், மேலும் பல இளம் நடிகைகளும் இப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்த படத்தின் கதையை ஒரு ஹாலிவுட் கதாசிரியரோடு இணைந்து உருவாக்கி இருக்கிறார் அட்லி. அதோடு வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்து இப்படத்தை ஒரு உலகப் படமாக வெளியிடவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்தியாவில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம் உலகப் படமாக வெளியாவது இதுதான் முதல் முறை.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு கேமியோ வேடத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியை அட்லி அணுகி இருப்பதாக சொல்லப்படுகிறது. அட்லி இயக்கிய ஜவான் படத்தில் விஜய் சேதுபதிதான் வில்லனாக நடித்திருந்தார். எனவே அவர் கண்டிப்பாக இதற்கு சம்மதிப்பார் என்று கருதப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

