100 கோடி வீணாப் போச்சே!.. ரவி மோகன் படம் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா?…

Ravi Mohan: ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி. அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான நடிகராக மாறினார். இவரின் படங்கள் பல கோடிகளை லாபமாக கொடுப்பதில்லை என்றாலும் தயாரிப்பாளருக்கு ஓரளவுக்கு லாபம் கொடுக்கும் மினிமம் கேரண்டி உள்ள நடிகராகவே இவர் இருக்கிறார். அதனால்தான் அவரை வைத்து தொடர்ந்து தயாரிப்பாளர்கள் படம் எடுத்து வருகிறார்கள்.

இவர் நடிப்பில் வெளியான கோமாளி, பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சூப்பர் ஹிட் அடித்தது. அதேபோல் ரவியின் அண்ணன் ராஜா இயக்கத்தில் நடித்த தனி ஒருவன் படமும் வெற்றி பெற்றதோடு தெலுங்கு உள்ளிட்ட சில மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஒரு விரைவில் தனி ஒருவன் 2 படமும் உருவாக உள்ளது.

ஒரு பக்கம் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருக்கிறார் ரவி. அதோடு கோவாவை சேர்ந்த கெனிஷா என்கிற பாடகியோடு அவருக்கு தொடர்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. தற்போது மும்பையில் தங்கி சினிமா தொடர்பான வேலைகளை பார்த்து வரும் ரவி மோகன் சமீபத்தில் தனக்கென ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கினார்.

genie
#image_title

ஒருபக்கம் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்காமல் தோல்விகளை சந்தித்து வருகிறது. சில படங்கள் முடங்கியிருக்கிறது. மேலும் இவர் இவர் நடித்துள்ள ஜீனி என்கிற திரைப்படம் 100 கோடி செலவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரவி நடித்ததிலேயே அதிக செலவு செய்யப்பட்ட படம் இதுதான் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருக்கிறார்.

ஆனால் இப்படம் முடிந்தும் இதுவரை வெளியாகவில்லை. அதற்கு காரணம் படத்தை போட்டு பார்த்த ஐசரி கணேசனுக்கு இப்படம் முழு திருப்தியை கொடுக்கவில்லை. எனவே திரை உலகில் உள்ள தனது நண்பர்கள் வட்டாரத்தை அழைத்து இப்படத்தை போட்டு காட்டி கருத்துக்களை கேட்டிருக்கிறார். அவர்களோ ‘படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம்.. அப்படியே விட்டு விடுங்கள்’ என சொல்லி அவருக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே பாடலாசிரியர் பா.விஜய் இயக்கிய ஒரு படம், மிர்ச்சி சிவா நடித்த சுமோ ஆகிய படங்களின் மூலம் 60 கோடி நஷ்டம் அடைந்தார் ஐசரி கணேஷ். இப்போது நூறு கோடி செலவு செய்துள்ள ஜீனி படமும் நஷ்டம் என்றால் என்ன செய்வது என யோசித்த ஐசரி கணேஷ் இயக்குனரை அழைத்து 30 நாட்கள் படத்தை ரீசூட் செய்து காட்சிகளை மாற்ற சொல்லி இருக்கிறாராம். அது நடந்த பின்னரே ஜீனி படம் ரசிகர்களின் பார்வைக்கு வரும் என கணிக்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.