மணிகண்டன் கையில் இவ்வளவு படங்களா?.. சைலண்ட்டா இருந்து சம்பவம் பண்றராரே!..

Manikandan: நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா, மிமிக்ரி கலைஞர், இயக்குனர் என பல முகங்களை கொண்டவர் மணிகண்டன்.விஜய் டிவியில் கலக்கப்போவது நிகழ்ச்சியில் கூட இவர் பங்கேற்றிருக்கிறார். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் எட்டு தோட்டாக்கள் உள்ளிட்ட சில படங்கள் கவனத்தைப் பெற்றது.

விக்ரம் வேதா, விஸ்வாசம் ஆகிய படங்களில் வசனம் எழுதி இருக்கிறார். ஜெய்பீம் படத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரம் ரசிகர்களிடம் இவரை பிரபலப்படுத்தியது. அதன்பின் கதையின் நாயகனாக நடிக்க துவங்கினார்.

இவர் நடித்த குட் நைட் படமும் பேசப்பட்டது. கடைசியாக வெளியான குடும்பஸ்தன் திரைப்படமும் இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. டெல்லி கணேசன் வைத்து நரை எழுதும் சுயசரிதம் என்கிற திரைப்படத்தை இவர் இயக்கியும் இருக்கிறார். குடும்பஸ்தன் திரைப்படத்திற்கு பின் இவர் என்ன திரைப்படத்தில் நடிக்கிறார் என்கிற தகவல் வெளிவரவில்லை.

manikandan
#image_title

ஆனால் சத்தம் இல்லாமல் ஆறேழு படங்களை கையில் வைத்திருக்கிறார் மணிகண்டன்
. இயக்குனர் பா.ரஞ்சித்தின் உதவியாளர் இயக்கும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் ஆகிய இரண்டு படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமான தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஒரு படம், தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள ஒரு புதிய படம் மற்றும் கொட்டுக்காளி படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார் மணிகண்டன்.

அவர் நடிப்பில் இரண்டு படங்கள் முடிந்துவிட்டது. மற்ற படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.