Singapenne: அன்பு சொன்னதைக் கேட்டு அதிர்ந்த ஆனந்தி… கோகிலா இப்படியா கேட்பாங்க?

சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் சூடுபிடிக்கிறது. அதே நேரம் எபிசோடுக்காக கொஞ்சம் ஜவ்வாக இழுக்கிறது. இன்றைய எபிசோடில் நடந்தது என்னன்னு பார்க்கலாமா…

ஆனந்தியை இக்கட்டான நிலைக்கு ஆளாக்கியவர்களில் ஒருவனான ரகுவைத் தேடிக் கண்டு பிடிக்கும் முயற்சியில் ஆனந்தியும், அன்புவும் தீவிரமாக ஈடுபட்டனர். கடைசியில் அவனை அலைந்து திரிந்து பிடித்தும் விட்டார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக உணர்ச்சிவசப்பட்டு அன்பு ரகுவைப் பிடித்து அடித்து துரத்த அவன் ஒரு வேனில் போய் விழுந்து படுகாயம் அடைந்து மயங்கி விழுகிறான். அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து எப்படியாவது கண் விழிக்க வைங்கன்னு சொல்கிறான் அன்பு.

அவன் விபத்தாகும் முன் அன்பு அடித்த அடியில் கருணாகரனின் பெயரை மட்டும் சொல்கிறான். இதனால் அன்புவும், ஆனந்தியும் பேரதிர்ச்சி அடைகிறார்கள். அன்பு கருணாகரனைப் போய் செமயாகத் திட்டி கோபத்தில் அடித்தும் விடுகிறான். ஆனால் அவன் அவ்வளவு சீக்கிரத்தில் உண்மையை ஒத்துக்குற ஆள் இல்லை என்கிறாள் ஆனந்தி. எவிடன்ஸ் இருந்தால் தான் அவனைப் பிடிக்க முடியும் என்கிறாள்.

அதே நேரம் அன்புவிடம் ரொம்ப உணர்ச்சிவசப்படாதே. பொறுமையா இருந்தால் தான் நாம இந்த விஷயத்துல கண்டுபிடிக்க முடியும். ரகுவை அடிக்கப் போய் அவன் விபத்துக்கு ஆளாகிவிட்டான். இனி அவன் கண் விழித்து சொல்ல வேண்டும். இதெல்லாம் தேவையா அன்பு? இப்படி கோபப்பட்டா கடைசி வரை நான் இதே நிலைமையில தான் இருக்கணும். எதிராளிகளுக்கு நாம என்ன பண்றோம்னு தெரியாம இருந்தா தான் நாம பிடிக்க முடியும்னு ஆதங்கப்படுகிறாள் ஆனந்தி. அதன்பிறகு அன்புவும் அவளது பேச்சைக் கேட்கிறான். அதே நேரம் ஆனந்தியை ஆஸ்டலில் கொண்டு விடுகிறான். நான் ரகு கண்விழிக்கும் வரை ஆஸ்பத்திரியில் இருக்கிறேன்.

நீ ரெஸ்ட் எடு என்கிறான். இதற்கிடையில் மித்ராவிடம் கருணாகரன் பயந்தபடி அன்பு அடித்ததையும் திட்டியதையும் சொல்கிறான். நேரில் நான் பேசுறேன். இதெல்லாம் போன்ல பேசுற விஷயமா என்கிறாள் மித்ரா. இந்த மித்ரா என்ன பண்ணித் தொலைச்சான்னு தெரியலையேன்னு கருணாகரன் புலம்புகிறான்.

அதே நேரம் கோகிலா அன்புவிடம் ரகுவை நீ மட்டும் இல்லன்னா இவ்ளோ சீக்கிரம் பிடிச்சிருக்க முடியாது என்கிறாள். பிடிச்சா பிரச்சனை தீர்ந்துடுமா? ஆனந்தியோட கர்ப்பத்துக்குக் காரணமானவனை யாருன்னு கண்டுபிடிச்சா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமா? ஆனந்தியோட நிலை என்னாகும்? நான் அவளோட எப்படி சேர முடியும்னு கேட்கிறான் அன்பு.

நீங்க தானே அன்பு ஆனந்தி எந்த நிலையில இருந்தாலும் ஏத்துக்குவேன்னு சொன்னீங்கன்னு கோகிலா கேட்கிறாள். நான் தயாராத் தான் இருக்கேன். ஆனந்தி தான் என்னை ஒதுக்கி வைக்கிறாள்னு அன்பு சொல்கிறான். அதே நேரம் ஆனந்தி கண்டிப்பா உன்னை ஏத்துக்குவா அன்பு. அவ மனசு முழுக்க நீதான் இருக்கே. ஆனா வெளியில காமிக்க மாட்டேங்குறான்னு சொல்கிறாள் கோகிலா. நான் உங்களை ஒண்ணு கேட்கவா அன்பு என்கிறாள்.

#image_title

கேளுங்கன்னு அன்பு சொன்னதும் ஆனந்தியையும், அவளுக்குப் பிறக்குற குழந்தையையும் உங்க அம்மா ஏத்துக்குவாங்களான்னு கேட்கிறாள். அம்மா மட்டும் அல்ல. யாரு வந்தாலும் ஆனந்தியை நான் ஏத்துக்கறதை யாராலும் தடுக்க முடியாது. ஆனந்தி வேற. அவளுக்குப் பிறக்கப் போற குழந்தை வேறன்னு இல்ல.

அவ குழந்தையையும் என் குழந்தையை நினைச்சித் தான் நான் வளர்ப்பேன்னு சொல்கிறான் அன்பு. ஆனந்தியைக் கல்யாணம் கட்டிக்கிட்டா உலகத்துல அதை விட பெரிய சந்தோஷம் எனக்கு இல்லன்னும் சொல்கிறான் அன்பு. இதை எல்லாம் ஆனந்தி மாடியில் இருந்து கேட்டு இன்ப அதிர்ச்சி அடைகிறாள் ஆனால் வெளிக்காட்டாமல் ஸ்தம்பித்து நிற்கிறாள். அடுத்து என்ன நடக்கிறது என்பதை நாளைய எபிசோடில் காணலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.