கமலுக்கு உதவுச்சோ இல்லையோ.. எனக்கு செம லக்கு!.. ஏ.ஆர்.முருகதாஸ் ஓப்பன்…
Madharasi: தீனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அடுத்த படமே விஜயகாந்தை வைத்து ரமணா எடுத்தார். இந்த படம் ஏ.ஆர்.முருகதாஸை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதன்பின் விஜயை வைத்து துப்பாக்கி கத்தி, சர்க்கார் ஆகிய மூன்று படங்களை இயக்கினார். மேலும் சூர்யாவை வைத்து இவர் இயக்கிய கஜினி திரைப்படமும் பேசப்பட்டது. துப்பாக்கி திரைப்படம் விஜயின் கேரியரில் ஒரு முக்கியமான படமாக மாறியது.
ரஜினியை வைத்து தர்பார் படம் எடுத்தார். ஆனால் அந்த படம் சரியாக ஓடவில்லை. எனவே கடந்த மூன்று வருடங்களாக ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்நிலையில்தான் சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை எடுத்து முடித்திருக்கிறார் முருகதாஸ். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.

எனவே இப்படத்தை புரமோட் செய்யும் விதமாக பல யுடியூப் சேனலுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் மதராஸி படம் பற்றிய பல தகவல்களையும் அவர் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றில் அவர் பேட்டி கொடுத்த போது ‘சிவகார்த்திகேயன் ஜாலியான காமெடி படங்களின் நடிப்பவர்.. அமரன் படம்தான் அவரை ஒரு சீரியஸ் மற்றும் ஆக்சன் நடிகராக மாற்றியது. அந்த படத்தின் மெகா வெற்றி உங்களுக்கு உதவியதா?’ என ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் சொன்ன முருகதாஸ் ‘அமரன் படத்தை இயக்கிய ராஜ்குமார் என்னுடைய உதவியாளர்தான். நான் அவனிடம் ‘டேய் அமரன் ஹிட்டு சிவகார்த்திகேயனுக்கு உதவுச்சோ இல்ல கமலுக்கு உதவுச்சோ எனக்கு தெரியாது.. ஆனா நீ எனக்குதான் ஹெல்ப் பண்ணிருக்க’ என சொன்னேன்’ என கூறி இருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

