Biggboss Tamil 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் குறித்த சர்ப்ரைஸ்… இவரா செமையா இருக்குமே?
Biggboss Tamil 9: பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் ஒன்பதாவது சீசன் களைக்கட்ட தொடங்கி இருக்கிறது. இதற்கான போட்டியாளர்கள் குறித்த ஆடிஷன் சமீபத்தில் நடந்திருப்பதாகவும் அதில் கலந்து கொண்ட பிரபலங்கள் குறித்த விவரமும் இணையத்தில் கசிந்திருக்கிறது.
ஹிந்தியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. 100 நாட்கள் ஒரே வீட்டில் 16க்கும் அதிகமான பிரபலங்கள் 60 கேமராக்கள் முன்னர் எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் வாழ வேண்டும். அப்பொழுது நடக்கும் சண்டைகளும், அவர்களுடைய உறவுகளும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தற்போது பல மொழிகளில் தயாரித்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் இதுவரை எட்டு சீசன்கள் முடிந்திருக்கிறது. முதல் ஏழு சீசனை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
கடந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். கமல்ஹாசன் அமைதியாக ஒரு விஷயத்தை கேட்பார் என்றால் விஜய் சேதுபதி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவு அடாவடியாக பேசி போட்டியாளர்களை கதி கலங்க வைத்தார்.
ஆனால் எதிர்பார்க்காத வகையில் அவரும் ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனையும் தற்போது விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கிறார். எப்போதும் அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட இருக்கும் நிகழ்ச்சி இந்த முறை செப்டம்பர் மாதம் ஒளிபரப்பாக முடிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் போட்டியாளர்கள் குறித்த ஆடிஷன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பிரபலங்கள் குறித்த விவரமும் தற்போது கசிந்திருக்கிறது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எப்போதுமே குக் வித் கோமாளியில் இருந்து சில பிரபலங்கள் உள்ளே வருவார்கள்.
அந்த வகையில் பிரபல போட்டியாளராக இருக்கும் உமைர் மற்றும் ஷபானா எண்ட்ரி கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எப்போதும் போல விஜய் டிவி பிரபலங்கள் ஆன நேஹா, அஃசிதா அசோக், வினோத் பாபு உள்ளிட்ட பிரபலங்களும் இந்த ஆடிஷனில் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது,
இது மட்டுமல்லாமல் பிரபல நடன இயக்குனர் சதீஷ் இந்த சீசனில் உள்ளே வர வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இன்னும் சில தினங்களில் இந்த நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகும் என கூறப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

