அஜித் இல்லனா அமீர்கான் இல்ல!.. மனம் விட்டு பேசிய ஏ.ஆர் முருகதாஸ்!…
Ajithkumar: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் திரைப்படம் தீனா. இந்த படத்தில் அஜித் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் விஜயகாந்தை வைத்து முருகதாஸ் இயக்கிய ரமணா திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த படத்திற்கு பின் பெரிய இயக்குனர்கள் வரிசையில் வந்தார் முருகதாஸ்.
அஜித்தை வைத்து மிரட்டல் என்கிற படத்தை துவங்கினார் முருகதாஸ். ஆனால் அஜித் வேறு படத்தில் கமிட் ஆகி இருந்ததால் அந்த படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை. எனவே முருகதாஸை சில மாதங்கள் காத்திருக்க சொன்னார் அஜித். ஆனால் முருகதாஸ் அந்த கதையை சூர்யாவிடம் சொல்லி கஜினி படமாக எடுத்தார். இதனால் ஏற்பட்ட கோபத்தில்தான் அதன்பின் இப்போது வரை முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடிக்கவே இல்லை என சொல்லப்பட்டது. அதே கஜினியை அமீர்கானை வைத்து ஹிந்தியில் எடுத்தார் முருகதாஸ்.

அஜித் இல்லை என்றாலும் விஜய் வைத்து துப்பாக்கி எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார் முருகதாஸ். மேலும் மீண்டும் விஜயை வைத்து கத்தி, சர்கார் போன்ற இடங்களை படங்களை இயக்கினார். தற்போது சிவகார்த்திகேயனை வைத்து மதராஸி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஒருபக்கம் சில நாட்களுக்கு முன்பு நண்பர்கள் தினத்தில் நடிகர் அஜித் உள்ளிட்ட சிலரோடு முருகதாஸ் நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை அஜித்தின் மேனேஜர் சுரேஷ்குமார் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.

ஊடகம் ஒன்றில் இதற்கு விளக்கமளித்த முருகதாஸ் ‘அஜித் சார் கார் ரேஸில் வெற்றி பெற்றதற்காகவும், அவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காகவும் நடந்த பார்ட்டி அது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அஜித் சார் என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான நபர். எனது முதல் படத்தில் அவர்தான் ஹீரோ. இப்போதெல்லாம் ஐந்து ஹிட் படங்கள் கொடுத்தால் தான் அஜித் சாரை நெருங்க முடியும்.
ஆனால் எனக்கோ முதல் படமே அவருடன் அமைந்தது. முதல் படமே அவரை வைத்து எடுத்ததால்தான் எனது ஐந்தாவது படத்தை அமீர்கனை வைத்து எடுக்க முடிந்தது. எனவே அஜித் சார் இல்லை என்றால் எனக்கு அமீர்கான் படமே இல்லை. சினிமாவில் எனது வளர்ச்சி வேகமாக நிகழ்ந்ததற்கு அஜித் சார்தான் காரணம்’ என நெகிழ்ந்து பேசி இருக்கிறார் முருகதாஸ்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

