Coolie Movie: ‘விக்ரம்’ மாதிரி வேணும்னு நினைச்சது தப்பா? ‘கூலி’யை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Coolie Movie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளியான திரைப்படம் கூலி. படம் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகிறது. ரிலீசுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவில் இந்த படம் உலக அளவில் 150 கோடியை வசூலித்திருக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அதிக ஓப்பனிங் பெற்ற தமிழ் படமாக கூலி திரைப்படம் அமைந்தது.

தொடர்ந்து விடுமுறை தினம் என்பதால் வசூலில் ஜாக்பாட் அடித்தது என்றே சொல்லலாம். ஆனால் திங்கள் கிழமையிலிருந்து இதனுடைய வசூலில் சரிவை காண முடிந்தது .நேற்றும் இந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. நேற்று மட்டும் இந்த படம் 4.7 கோடி மட்டுமே வசூலித்திருப்பதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. கூலி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் இது ஒரு பேன் இந்தியா திரைப்படமாக தயாரானது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறார்கள். அனிருத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். படத்தில் மோனிகா பாடல் பெரும் வைரலாகி ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இந்த பாடல் மூலம் பூஜா ஹெக்டே பிரபலமானாரோ இல்லையோ அதில் ஆடிய சௌபின் சாகிர் உலக அளவில் பிரபலமாகி இருக்கிறார். சமீபகாலமாக ரஜினியின் படங்களில் ஐட்டம் பாடல் இடம் பெற்று படத்திற்கு பெரிய ஹைப்பை கொடுத்து வருகிறது.

அந்த வகையில் ஜெயிலர் படத்தில் காவாலா பாடல் பெரியளவு வரவேற்பை பெற்றது. அதன் மூலம் தமன்னா மீண்டும் பாப்புலர் ஆனார். ஆனால் இந்த படத்தைப் பொறுத்த வரைக்கும் பூஜா ஹெக்டேவை விட சௌபின் சாகிருருக்குத்தான் அதிக மவுசு இருப்பதாகவே தெரிகிறது. விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் உடன் எப்படியாவது கைகோர்க்க வேண்டும் என ரஜினி எண்ணியிருந்தார்.

vikram movie

அப்போதே இருவரும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் .அதன் பிறகு லோகேஷ் லியோ படத்தில் பிசியானார். ரஜினி ஜெயிலர், வேட்டையன் போன்ற படங்களில் பிஸியானார், இப்போது தான் இருவரும் இணைந்து ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக இந்த படத்தை கொடுத்து இருக்கிறார்கள், ஆனால் படம் வெளியான பிறகு ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை என்றுதான் பல பேர் கருத்து தெரிவித்து வருகிறார்கள், இதில் ஒரு புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது, விக்ரம் படம் மாதிரி வேணும்னு சொன்னால் இவருக்கு பதில் இவர் என போட்டு இப்படியா கிண்டி வைப்பது என லோகேஷ் என நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.